உள்ளூர் செய்திகள்
சேலத்தில் 3 நாட்களில் விதிகளை மீறிய 8,971 வாகன ஓட்டிகள் மீது வழக்கு
- புதிதாக பொறுப்பேற்ற அதிகாரிகள் கடந்த 30-ந் தேதி தொடங்கி 2-ந் தேதி வரை தமிழக முழுவதும் கோப்பிங் ஆபரேஷன் மேற்கொள்ள உத்தரவிட்டனர்.
- சேலம் மாநகர போலீஸ் கமிஷனர் விஜய குமாரி தலைமையில் 3 நாட்கள் இந்த ஆப்ரேஷன் நடைபெற்றது.
சேலம்:
தமிழக போலீஸ் டி.ஜி.பி. மற்றும் ஏ.டி.ஜி.பி. மாற்றப் பட்டதை அடுத்து புதிதாக பொறுப்பேற்ற அதிகாரிகள் கடந்த 30-ந் தேதி தொடங்கி 2-ந் தேதி வரை தமிழக முழுவதும் கோப்பிங் ஆபரேஷன் மேற்கொள்ள உத்தரவிட்டனர்.
அதன்படி சேலம் மாநகர போலீஸ் கமிஷனர் விஜய குமாரி தலைமையில் 3 நாட்கள் இந்த ஆப்ரேஷன் நடைபெற்றது. இதில் ஹெல்மெட், சீட் பெல்ட் அணியாமல் வாகனம் ஓட்டி யது உட்பட பல்வேறு விதி மீறல் தொடர்பாக 8 ஆயி ரத்து 971 வாகன ஓட்டிகள் மீது வழக்கு பதிவு செய்யப் பட்டது. போதையில் வாக னம் ஓட்டிய 213 பேரிடம் வாக னம் பறிமுதல் செய்து அப ராதம் விதித்தனர். மாநகரில் உள்ள 824 ரவுடிகளில் 424 பேரை நேரில் அழைத்து எச்சரிக்கை செய்து அனுப்பினர்.