உள்ளூர் செய்திகள்

பிச்சை எடுத்து நிதி வழங்கிய முதியவர்.

முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு பிச்சை எடுத்து ரூ.10 ஆயிரம் வழங்கிய முதியவர்

Published On 2023-06-05 09:10 GMT   |   Update On 2023-06-05 09:10 GMT
  • ஊர் ஊராக சென்று பிச்சை எடுத்து முதல்-அமைச்சரின் பொது நிவா ரணம் மற்றும் கொரோனா நிவாரணத்துக்கு நிதி வழங்கி வருகிறார்.
  • அதன்படி, தமிழகம் முழுவதும் கலெக்டர் அலுவலகங்களுக்கு சென்று இதுவரை ரூ.55 லட்சத்திற் கும் மேல் நிவாரண நிதியாக வழங்கி உள்ளார்.

சேலம்:

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே உள்ள ஆலங்கிணறு பகு தியைச் சேர்ந்தவர் பூல்பாண்டியன் (வயது 75). இவர், ஊர் ஊராக சென்று பிச்சை எடுத்து முதல்-அமைச்சரின் பொது நிவா ரணம் மற்றும் கொரோனா நிவாரணத்துக்கு நிதி வழங்கி வருகிறார்.

அதன்படி, தமிழகம் முழுவதும் கலெக்டர் அலுவலகங்களுக்கு சென்று இதுவரை ரூ.55 லட்சத்திற் கும் மேல் நிவாரண நிதியாக வழங்கி உள்ளார்.

ஏற்கனவே சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் ரூ.10 ஆயிரம் நிதி வழங்கிய அவர், இன்று மீண்டும் முதல்-அமைச்சர் பொது நிவாரண நிதியாக, சேலம் கலெக்டர் அலுவலகத்தில் ரூ.10 ஆயிரம் வழங்கினார்.

அப்போது அவர் கூறுகையில், எனது மனைவி இறந்து விட்டார். எனக்கு ஒரு மகள் மற்றும் 2 மகன்கள் உள்ளனர். அவர்கள் கோவை உள்பட பல்வேறு பகுதிகளில் வேலை செய்து வரு கிறார்கள். நான் அவர்களி டம் செல்வதில்லை.

தமிழகம் முழுவதும் பிச்சை எடுத்து பொது மக்களை காக்கும் நோக்கத்தில் முதல்-அமைச்சரின் பொது நிவா ரண நிதிக்கு பணம் வழங்கி வருகிறேன். எனது இறுதி காலம் வரை இதனை ஒரு பணியாக செய்வேன்.

ஒரு வாரத்திற்கு ரூ.10 ஆயிரம் வரை யாசகம் கிடைக்கும். அதனை வைத்து இந்த நிதி உதவியை செய்து வருகிறேன் என்றார். 

Tags:    

Similar News