உள்ளூர் செய்திகள்

ஆத்தூர் அரசு சேவை மையத்தில் தற்காலிகமாக பணிபுரிய விண்ணப்பங்கள் வரவேற்பு

Published On 2023-10-28 07:23 GMT   |   Update On 2023-10-28 07:23 GMT
  • ஒருங்கிணைந்த சேவை மையத்திற்கு தேவைப்படும் ஒரு பணியாளரை நிரப்புதல் பொருட்டு தற்காலிக பணியாளர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
  • இப்பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

சேலம்:

சேலம் மாவட்ட கலெக்டர் கார்மேகம் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:-

சேலம் மாவட்டத்தில் பெண்களுக்கு தேவைப்படும் அவசரகால மீட்பு, மருத்துவ உதவி, மனநல ஆலோசனை, காவல் உதவி, சட்ட உதவி, தற்காலிக தங்குமிடம் ஆகியவற்றை வழங்கி அவர்களை பாதுகாக்க ஒன்றிய அரசினால் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத் துறையின் கீழ் சகி பெண்கள் ஒருங்கிணைந்த சேவை மையம் ஆகஸ்டு மாதம் 2018-ம் ஆண்டு முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

தற்காலிக தேர்வு

சேலம் மாவட்டம் ஆத்தூரில் கூடுதலாக ஒரு சகி பெண்கள் ஒருங்கிணைந்த சேவை மையம் தொடங்குவதற்கு ஆணை பெறப்பட்டுள்ளது. தற்பொழுது புதிதாக ெதாடங்கப்பட உள்ள ஆத்தூர் பெண்கள் ஒருங்கிணைந்த சேவை மையத்திற்கு தேவைப்படும் 13 பணியாளர்கள் மற்றும் சேலம் மாவட்டம் பெண்கள் ஒருங்கிணைந்த சேவை மையத்திற்கு தேவைப்படும் ஒரு பணியாளரை நிரப்புதல் பொருட்டு தற்காலிக பணியாளர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இப்பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடம் குறித்த விவரங்கள் https://salem.nic.in என்ற இணையதள முகவரியில் பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள். விண்ணப்பிக்க விருப்பமுள்ள தகுதியான நபர்கள் தங்களது சுய விபரங்களை அடுத்த மாதம் 8-ந்தேதி மாலை 5 மணிக்குள் மாவட்ட சமூக நல அலுவலகம், மாவட்ட கலெக்டர் வளாகம், அறை எண் 126 என்ற முகவரிக்கு நேரிலோ, அல்லது தபால் மூலமாகவோ கிடைக்குமாறு அனுப்பி வைக்கத் தெரிவிக்கப்படுகிறது.

இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News