சேலம் தலைமை தபால் நிலையத்தில்பண பரிவர்த்தனைக்கு சிறப்பு ஏற்பாடு
- சேலம் தலைமை தபால் அஞ்சல் நிலையத்தில் கடந்த மாதம் 7-ந் தேதி முதல் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை அனைத்து சேவைகளும் வழங்கப்பட்டு வருகிறது.
- பதிவு தபால், விரைவு தபால் சேவை, அனைத்து விதமான பணப்பரிவர்த்தனைகள் (பணம் செலுத்துதல், பணம் எடுத்தல்), அஞ்சல் ஆயுள் காப்பீடு, கிராமப்புற அஞ்சல் ஆயுள் காப்பீடு சேவைகளை பெறலாம்.
சேலம்:
சேலம் பழைய பஸ் நிலையத்தில் உள்ள சேலம் தலைமை தபால் அஞ்சல் நிலையத்தில் கடந்த மாதம் 7-ந் தேதி முதல் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை அனைத்து சேவைகளும் வழங்கப்பட்டு வருகிறது. அதாவது, பதிவு தபால், விரைவு தபால் சேவை, அனைத்து விதமான பணப்பரிவர்த்தனைகள் (பணம் செலுத்துதல், பணம் எடுத்தல்), அஞ்சல் ஆயுள் காப்பீடு, கிராமப்புற அஞ்சல் ஆயுள் காப்பீடு சேவைகளை பெறலாம்.
இதுதவிர, தற்பொழுது புதிதாக பெண்களுக்கு என மட்டுமே சிறப்பாக தொடங்கப்பட்டு உள்ள மகிலா சம்மான் சேமிப்பு பத்திரக்கணக்கும் (வட்டி விகிதம் 7.5 சதவீதம், இரண்டு ஆண்டுகள் வரை) தொடங்கும் வசதியும் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் உள்ளது.
இதுபோன்று காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை தபால் சேவைகளை சேலம் மாநகரில் இயங்கி வரும் முக்கிய தபால் அலுவலகங்களிலும் கொண்டு வருவதற்கான முயற்சி பரிசீலனையில் உள்ளது. எனவே, பொதுமக்கள் அனைவரும் இந்த வாய்ப்பை பயன்படுத்தி க்கொள்ளுமாறு சேலம் கிழக்கு அஞ்சல் கோட்ட முதுநிலை கண்காணிப்பாளர் அருணாசலம் கேட்டுக்கொண்டுள்ளார்.