உள்ளூர் செய்திகள்

வாழப்பாடி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் தேங்காய் பருப்பு, நிலக்கடலை, மஞ்சள், மக்காச்சோளம் ஏலம்

Published On 2023-07-27 08:14 GMT   |   Update On 2023-07-27 08:14 GMT
  • வாழப்பாடி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் தேங்காய் பருப்பு மற்றும் மக்காச்சோளம் மறைமுக ஏலம் நடைபெற்று வருகிறது.
  • வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை தேங்காய் பருப்பு, செவ்வாய் மற்றும் வியாழன் தோறும் மக்காச்சோளம் ஏலம் நடைபெறுகிறது.

வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத் துறையின், சேலம் விற்பனைக்குழு, வாழப்பாடி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் தேங்காய் பருப்பு மற்றும் மக்காச்சோளம் மறைமுக ஏலம் நடைபெற்று வருகிறது.வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை தேங்காய் பருப்பு, செவ்வாய் மற்றும் வியாழன் தோறும் மக்காச்சோளம் ஏலம் நடைபெறுகிறது. மேலும் மஞ்சள், நிலகடலை ஆகிய விளைப்பொருளுக்கும் மறைமுக ஏலம் நடத்தப்பட உள்ளது.உள்ளூர், வெளியூர் வியாபாரிகள் ஏலத்தில் கலந்து கொள்வதால், விவசாயிகளின் விளைபொருளுக்கு நல்ல விலை கிடைக்க வாய்ப்புள்ளது. ஆகவே, விவசாயிகள் தங்களது விளைப்பொருட்களை தரம் பிரித்து, வாழப்பாடி ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்திற்கு கொண்டு வந்து, ஏலத்தில் விற்பனை செய்தால் தரத்திற்குரிய விலை கிடைக்கும்.ஒழுங்கு முறை விற்பனைக் கூடத்தில், விவசாயிகளிடம் எந்தவித கமிஷன் (தரகு) பிடித்தமும் செய்வதில்லை. விற்பனை செய்த முழுத்தொகையும் பெறலாம். எனவே, விவசாயிகள் மேற்படி மறைமுக ஏலத்திற்கு விளைப்பொருட்களை கொண்டு வந்து விற்பனை செய்து பயன் பெறலாமென, ஒழுங்குமுறை விற்பனை கூட கண்காணிப்பாளர் பிரபாவதி தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News