- ஒவ்வொரு ஆண்டும் புரட்டாசி மாதத்தில் வெளியூருக்கு சென்று சங்கு ஊதி பொதுமக்களிடம் பணம் பெற்று வாழ்க்கை நடத்தி வந்தார்.
- சம்வத்தன்று வழக்கம் போல் சங்கு ஊதிக் கொண்டு சாலையில் சென்றபோது பின்னால் வந்த வாகனம் மோதியதில் தூக்கி வீசப்பட்ட குழந்தைகவுண்டர் படுகாயம் அடைந்தார்.
தாரமங்கலம்:
சேலம் மாவட்டம் கொங்கணாபுரம் அருகில் உள்ள குண்டுராமபாளையம் பகுதியை சேர்ந்தவர் குழந்தைகவுண்டர் (வயது 75).
இவர் ஒவ்வொரு ஆண்டும் புரட்டாசி மாதத்தில் வெளியூருக்கு சென்று சங்கு ஊதி பொதுமக்களிடம் பணம் பெற்று வாழ்க்கை நடத்தி வந்தார்.
வாகனம் மோதியது
இந்த ஆண்டும் புரட்டாசி மாதத்தில் சங்கு ஊதுவதற்காக பாப்பம்பாடி அருகில் உள்ள கொண்டக்காரனூர் பகுதியில் வந்து தங்கியுள்ளார். சம்வத்தன்று வழக்கம் போல் சங்கு ஊதிக் கொண்டு சாலையில் சென்றபோது பின்னால் வந்த வாகனம் மோதியதில் தூக்கி வீசப்பட்ட குழந்தைகவுண்டர் படுகாயம் அடைந்தார்.
அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
வழக்கு
இது குறித்து குழந்தை கவுண்டரின் மகள் மாதம்மாள் (45 )என்பவர் கொடுத்த புகாரின் பேரில் தாரமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.