போலி நகை மோசடி: சேலம் பெண்ணை மடக்கி பிடித்து கைது செய்த மும்பை போலீசார்
- நிர்மலா (வயது 26). இவர் மும்பையில் போலி நகை கொடுத்து மோசடி செய்ததாக தெரிகிறது. இதையடுத்து அவரை மும்பை பாந்த்ரா போலீசார் தேடி வந்தனர்.
- நிர்மலா சேலத்தில் பதுங்கி இருப்பதாக தகவல் அறிந்து சேலம் வந்த போலீசார் அன்னதானப்பட்டி போலீசார் உதவியுடன் நிர்மலாவை கைது செய்தனர்.
சேலம்:
சேலம் பாதுகாப்பட்டி சண்முகா நகர் அடுத்த ஜவகர் நகர் பகுதி சேர்ந்த வெங்கடேசன். இவரது மகள் நாகமணி என்கிற நிர்மலா (வயது 26). இவர் மும்பையில் போலி நகை கொடுத்து மோசடி செய்ததாக தெரிகிறது. இதையடுத்து அவரை மும்பை பாந்த்ரா போலீசார் தேடி வந்தனர்.
நிர்மலா சேலத்தில் பதுங்கி இருப்பதாக தகவல் அறிந்து சேலம் வந்த போலீ சார் அன்னதானப்பட்டி போலீசார் உதவியுடன் நிர்மலாவை கைது செய்தனர். பின்பு அவரிடம் அன்னதானப்பட்டி போலீஸ் நிலையத்தில் வைத்து விசா ரணை நடத்தி னர். விசா ரணையில், நிர்மலா தனது கூட்டாளிக ளுடன் மும்பை பாந்த்ரா பகுதியில் பகுதியில் உள்ள நகை கடையில் பழைய நகையை மாற்றி புது நகை எடுப்பது போல் காண்பித்து கவரிங் நகையை கொடுத்து மோசடி யில் ஈடுபட்டது தெரிய வந்தது.
நகைக்கடை உரிமையா ளர் கொடுத்த புகார் பேரில் வழக்கு பதிவு செய்து நிர்மலாவின் கூட்டாளி களை பிடித்து விசாரணை நடத்தினர். அவர்கள் கொடுத்த தகவலின்பேரில் சேலத்திற்கு வந்து நிர்ம லாவை கைது செய்துள்ள னர். இதை தொடர்ந்து நிர்மலாவை போலீசார் சேலம் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டு எண் 4-ல் ஆஜர் படுத்தினர். இதை தொடர்ந்து கோர்ட்டு அனுமதியுடன் நிர்மலாவை மும்பைக்கு விசாரணைக்கு அழைத்து சென்றனர்.