சேலத்தில் லாரிகள் அடுத்தடுத்து மோதல்; டிரைவர் பலி
- சேலம் மாமாங்கம் டால்மியா இறக்கத்தில் லாரி ஒன்று நேற்று இரவு நின்று கொண்டு இருந்தது.
- அந்த வழியாக பின்னால் வந்த மினிவேன் அந்த லாரி மீது பயங்கரமாக மோதியது.
சேலம்:
சேலம் மாமாங்கம் டால்மியா இறக்கத்தில் லாரி ஒன்று நேற்று இரவு நின்று கொண்டு இருந்தது.
அப்போது அந்த வழியாக நள்ளிரவு வந்த மற்றொரு லாரி நின்ற லாரியின் வலது புறம் உரசி சாலையின் நடுவில் தடுப்பு சுவரில் மோதி நின்றது.
இதையடுத்து அந்த வழியாக பின்னால் வந்த மினிவேன் அந்த லாரி மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து வந்த சூரமங்கலம் போலீசார் மீட்டு பணியில் ஈடுபட்டனர்.
டிரைவர் பலி
இந்த விபத்தில் மினி வேனை ஓட்டி வந்த டிரைவர் மேச்சேரி காக்காச்சி வளவை சேர்த்த பச்சமுத்து மகன் மணி (வயது 28) சம்பவ இடத்திலேயே பரிதமாக இறந்தார். அந்த வேனில் வந்த டவர் அமைக்கும் வேலைக்கு சென்ற மேச்சேரி பகுதியை சேர்ந்த செந்தில், தங்கராசு, ரவி ஆகியோர் படுகாயம் அடைந்தனர். அவர்களை போலீசார் மீட்டு குரங்குசாவடியில் உள்ள தனியார் ஆஸ் பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
சிகிச்சை
அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. வேன் டிரைவர் மணி உடலை பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த விபத்தால் நள்ளிரவு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. விபத்துக்குள்ளான லாரிகளை அப்புறப்படுத்தி போலீசார் போக்குவரத்தை சரி செய்தனர்.