உள்ளூர் செய்திகள்

சேலம் காந்தி ஸ்டேடியத்தில் தேசிய விளையாட்டு தின போட்டிகள்29-ந் தேதி நடக்கிறது

Published On 2023-08-26 09:40 GMT   |   Update On 2023-08-26 09:40 GMT
  • ஆண்டும் மேஜர் தயான்சந்த் பிறந்த நாளான ஆகஸ்ட் 29-ந் தேதி தேசிய விளையாட்டு நாளாக நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது.
  • சேலம் மகாத்மா காந்தி விளையாட்டு மைதானத்தில் வருகிற 29-ந் தேதி காலை 9 மணியளவில் விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட உள்ளது.

சேலம்:

சேலம் மாவட்ட விளை யாட்டு மேம்பாட்டு அதிகாரி சிவரஞ்சன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

ஒவ்வொரு ஆண்டும் மேஜர் தயான்சந்த் பிறந்த நாளான ஆகஸ்ட் 29-ந் தேதி தேசிய விளையாட்டு நாளாக நாடு முழுவதும் கொண்டா டப்பட்டு வருகிறது.

இந்த தேசிய விளையாட்டு தினத்தினை சிறப்பிக்கும் வகையில் சேலம் மகாத்மா காந்தி விளையாட்டு மைதானத்தில் வருகிற 29-ந் தேதி காலை 9 மணியளவில் விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட உள்ளது.

19, 25 வயதுக்குட்பட்ட ஆண், பெண் வீரர்களுக்கு கையுந்துபந்து, 100 மீட்டர் ஓட்ட போட்டி நடக்கிறது. 45 வயதுக்குட்பட்ட வீரர்களுக்கு 1 மீட்டர் நடை பயணம், 50 மீ, 100 மீ ஓட்டம், கேரம் ஆகியவை நடக்கிறது.

இப்போட்டியில் கலந்து கொள்ள விரும்புவோர் போட்டி அன்று தங்கள் பெயர்களை பதிவு செய்து நேரடியாக கலந்து கொள்ளலாம். இதில் கலந்து கொள்ளும் அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்படும். இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News