சேலம் அருகே ஓடும் ரெயிலில் செல்போன்கள் திருடிய 2 பேர் கைது
- பாட்டூரை சேர்ந்தவர் பிச்சுகா ஸ்ரீஹரிபாபு (46), இவர் சேலம் மாவட்டம் இளம்பிள்ளையில் சேலை வாங்கி வியாபாரம் செய்து வருகிறார்.
- சபரி எக்ஸ்பிரஸ் ரெயிலில் ஐதராபாத்தில் இருந்து சேலம் வழியாக திருவனந்தபுரம் வரும் ரெயிலில் மனைவியுடன் வந்தார். மொரப்பூர் ரெயில் நிலையம் அருகே வந்த போது தனது செல்போன் மாயமாகி இருந்ததால் அதிர்ச்சி அடைந்தார்.
சேலம்:
ஆந்திரமாநிலம் நெல்லூர் மாவட்டம் பாட்டூரை சேர்ந்தவர் பிச்சுகா ஸ்ரீஹரிபாபு (46), இவர் சேலம் மாவட்டம் இளம்பிள்ளையில் சேலை வாங்கி வியாபாரம் செய்து வருகிறார்.
வியாபாரி
வழக்கம் போல கடந்த 31-ந் தேதி இளம்பிள்ளையில் சேலைகள் வாங்க சபரி எக்ஸ்பிரஸ் ரெயிலில் ஐதராபாத்தில் இருந்து சேலம் வழியாக திருவனந்தபுரம் வரும் ரெயிலில் மனைவியுடன் வந்தார். மொரப்பூர் ரெயில் நிலையம் அருகே வந்த போது தனது செல்போன் மாயமாகி இருந்ததால் அதிர்ச்சி அடைந்தார்.
பின்னர் சம்பவம் குறித்து சேலம் ஜங்சன் ரெயில் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் நேற்று சேலம் ஜங்சன் ரெயில் நிலைய நடைமேடை எண் 1-ல் சந்தேகத்திற்கு இடம் அளிக்கும் வகையில் சுறறி திரிந்த வாலிபரை பிடித்து விசாரித்த போது அவர் ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தை சேர்ந்த பிரம்மம் (25) என்பது தெரிய வந்தது. இதையடுத்த அவரை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து திருட்டு செல்போனையும் பறிமுதல் ெசய்தனர். இந்த செல்போனின் மதிப்பு ரூ.12 ஆயிரம் என போலீசார் தெரிவித்தனர்.
மற்றொரு சம்பவம்
இேத போல மகாராஷ்டிரா மாநிலம் புனே பகுதியை சேர்ந்தவர் ஷியாலி உமேஷ் மோர் (39), இவர் கடந்த 31-ந் தேதி மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் குடும்பத்துடன் சென்று சாமி தரிசனம் செய்தார். பின்னர் போடிநாயக்கனூ்ரில் இருந்து -சென்னை துரந்தோ எக்ஸ்பிரஸ் ரெயிலில் காட்பாடிக்கு ரெயிலில் புறப்பட்டார். ரெயில் சேலம் ஜங்சன் ரெயில் நிலையம் வரும் போது கண் விழித்து பார்த்த போது அவரது செல்போன் மாயமாகி இருந்தது தெரிய வந்தது.
இதையடுத்து சம்பவம் குறித்து ேசலம் ஜங்சன் ரெயில் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் நேற்று அதிகாலை சேலம் ரெயில் நிலைய 3-வது பிளாட்பார்மில் சுற்றி திரிந்த நாமக்கல் மாவட்டம் பொத்தனூர் பாலாஜி நகரை சேர்ந்த யுவராஜ் (39) என்பவரை பிடித்து விசாரித்தனர். அப்போது அவர் செல்போன் திருடியதை ஒப்புக்கொண்டதால் கைது செய்தனர். அவரிடம் இருந்து 10 ஆயிரம் மதிப்பிலான அந்த செல்போனையும் மீட்டனர். 2 பேரையும் கோர்ட்டில் ஆஜர் படுத்தி சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.