இந்து அறநிலைத்துறை சார்பில் நாமக்கல்லில் நடக்க இருந்த இலவச திருமணம் தேதி மாற்றம்
பரமத்திவேலூர்:
நாமக்கல் மாவட்டத்தில் இந்து சமய அறநிலை யத்துறை சார்பில், ஏழை, எளியோருக்கு வருகிற
28-ந் தேதி இலவச திரு மணம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.
மேலும் இந்த திருமண விழாவில் கலந்து கொள்ளும் ஜோடிகளுக்கு திருமாங்கல்யத்திற்கு 4 கிராம் தங்கம், புதிய ஆடை, திருமணத்துக்கு வரும் மணமக்களின் வீட்டார் 20 பேருக்கு திருமண விருந்து, பீரோ, கட்டில், மெத்தை, தலையணை, பாய், மணமக்க ளுக்கு வாட்ச், மிக்ஸி, சமை யல் பாத்திரங்கள் மற்றும் திருமணத்துக்கு தேவையான மாலை, பூஜை சாமான்கள் அனைத்தும் இலவசமாக வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டு இருந்தது.
இதையடுத்து நாமக்கல் மாவட்டம் முழுவதும், அற நிலையத்துறை கட்டுப்பாட் டில் உள்ள கோவில்களில் 100-க்கும் மேற்பட்ட ஜோடி கள் திருமணம் செய்ய உரிய ஆவணங்களுடன் பதிவு செய்து இருந்தனர். இவர்க ளுக்கு மோகனூரில் உள்ள அசலதீபேஸ்வரர் ஆல யத்தில் வருகிற 28-ந் தேதி திருமணம் நடக்க இருந்தது.
இதையடுத்து, மணமக்களின் பெற்றோரும் பத்திரிக்கை அடித்து, உறவினர்களுக்கு கொடுத்த நிலையில், திருமண தேதியை ஜூலை 7-ந் தேதிக்கு மாற்றம் செய்துள்ளதாக, இந்து அறநிலையத்துறை சார்பில் கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது. இதனால் மணமக்களின் பெற்றோர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
மேலும் வருகிற ஜூலை 7-ந் தேதி தேய்பிறை முகூர்த்தம் என்பதால், திருமணம் செய்ய மணமக்களின் பெற்றோர் தயக்கம் காட்டுகின்றனர். இதனால் திருமணம் செய்ய பதிவு செய்தவர்கள் தேதி மாற்றத்தை விரும்பாமல் 28-ந் தேதியே திருமணம் செய்ய முடிவு செய்துள்ள னர்.
பாண்டமங்கலம் பிரசன்ன வெங்கட்ரமண சுவாமி கோவிலில் இலவச திருமணம் செய்ய 8 மண மக்கள் ஜோடி பதிவு செய்தி ருந்தனர். தேதி மாற்றத்தால் 6 மணமக்கள் ஜோடிகள் பதிவை ரத்து செய்துவிட்டு வரும் 28-ந் தேதியில் முகூர்த்தம் நடத்த முடிவு செய்துள்ளனர்.
திருமண தேதி மாற்றத் தால் மணமக்களின் பெற் றோர்கள், உறவினர்கள் கடும் அதிருப்தி அடைந்துள் ளனர். இது குறித்து அற நிலையத்துறை அதிகாரி களிடம் கேட்டபோது,
இந்து அறநிலையத்துறை உயர் அதிகாரிகள் உத்தர வின் பேரில் தேதி மாற்றப் பட்டுஉள்ளது. இதற்குரிய காரணம் எங்களுக்கு தெரியவில்லை. வருகிற 7-ந் தேதி இலவச திருமணம் நடக்க இருப்பதால், தகுதி உடைய மணமக்கள் உரிய ஆவணங்களுடன் பதிவு செய்து கொள்ளலாம் என கூறினர்.