உள்ளூர் செய்திகள்

சங்ககிரி ஆர்.எஸ். அரசு மேல்நிலைப்பள்ளியில் பெண் குழந்தைகளின் தற்காப்பு மற்றும் விழிப்புணர்வு பயிற்சியில் சிலம்பாட்டப் போட்டியில் கலந்து கொண்ட மாணவிகள்.

காவல்துறை சார்பில் பெண் குழந்தைகளின் தற்காப்பு, விழிப்புணர்வு பயிற்சி

Published On 2023-10-20 09:42 GMT   |   Update On 2023-10-20 09:42 GMT
  • சேலம் மாவட்டம் சங்ககிரி உட்கோட்ட காவல்துறை சார்பில் பெண் குழந்தைகளின் தற்காப்பு மற்றும் விழிப்புணர்வு பயிற்சி
  • பெண் குழந்தைகள் பள்ளி இடை நிற்றலை தவிர்த்தல், குழந்தை திருமணம், பாலியல் துன்புறுத்தல், தகவல் தொழில்நுட்பம், தற்காப்பு கலை

சங்ககிரி:

சேலம் மாவட்டம் சங்ககிரி உட்கோட்ட காவல்துறை சார்பில் பெண் குழந்தைகளின் தற்காப்பு மற்றும் விழிப்புணர்வு பயிற்சியானது சங்ககிரி ஆர்.எஸ். அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. சங்ககிரி அனைத்து மகளிர் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் வளர்மதி தலைமை வகித்தார்.

இதில் சேலம் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் சைமன்ராஜ் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பெண் குழந்தைகள் பள்ளி இடை நிற்றலை தவிர்த்தல், குழந்தை திருமணம், பாலியல் துன்புறுத்தல், தகவல் தொழில்நுட்பம், தற்காப்பு கலை ஆகியவற்றை குறித்து எடுத்துக்கூறி மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

அதனைத் தொடர்ந்து பள்ளி மாணவிகளுக்கு சிலம்பு போட்டி நடந்தது. அதில் வெற்றி பெற்றவர்களுக்கு சப்-இன்ஸ்பெக்டர் உதயகுமார் பரிசுகள் வழங்கினார். பள்ளி தலைமை ஆசிரியர் விஜய் ஆனந்தன் மற்றும் ஆசிரியைகள், மாணவிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News