உள்ளூர் செய்திகள்

காவிரி ஆற்றில் தண்ணீர் திறப்பு 2,724 கன அடியாக குறைப்பு

Published On 2023-11-23 08:01 GMT   |   Update On 2023-11-23 08:01 GMT
  • 7 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
  • தண்ணீர் திறப்பு நேற்று 3,025 கன அடியாக இருந்த நிலையில் இன்று 2,724 கன அடியாக குறைந்துள்ளது.

சேலம்:

கர்நாடக மாநிலம் பெங்களூரு உள்பட பல்வேறு பகுதிகளில் கடந்த 2 நாட்களாக மழை பெய்து வருகிறது. மேலும் பலத்த மழையின் காரணமாக தட்சிண கன்னடா, உத்தர கன்னடா, உடுப்பி, சிவமொக்கா, குடகு, ஹாசன், சிக்கமகளூரு ஆகிய 7 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கிருஷ்ணராஜ சாகர் அணைக்கு இன்று காலை நீர்வரத்து 1450 கன அடியாக உள்ளது. அணையில் இருந்து காவிரி ஆற்றில் 1224 கன அடி நீர் வெளியேற்றப் படுகிறது. அணையின் நீர்மட்டம் 99.10 அடியாக உள்ளது.

கபினி அணைக்கு நீர்வரத்து 221 கன அடியாகவும் நீர்வெளியேற்றம் 1500 கன அடியாகவும் உள்ளது. தற்போது இந்த அணையின் நீர்மட்டம் 73.80 அடியாக உள்ளது. கிருஷ்ணராஜ சாகர் மற்றும் கபினி ஆகிய அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு நேற்று 3,025 கன அடியாக இருந்த நிலையில் இன்று 2,724 கன அடியாக குறைந்துள்ளது.

Tags:    

Similar News