உள்ளூர் செய்திகள்

செயற்கை நீரூற்று முன் நின்று செல்பி எடுக்கும் சுற்றுலா பயணிகள்.

ஏற்காடு கோடைவிழாவில் செல்லப்பிராணிகள் கண்காட்சியை காணதிரண்ட சுற்றுலா பயணிகள்

Published On 2023-05-27 09:17 GMT   |   Update On 2023-05-27 09:17 GMT

    ஏற்காடு:

    சேலம் மாவட்டம் ஏற்காட்டில் 46-வது கோடைவிழா, மர் கண்காட்சி கடந்த 21-ந் தேதி தொடங்கி நடை பெற்று வருகிறது. நாளையுடன் கோடை விழா நிறைவடையும் நிலையில், பல்வேறு விதமான போட்டிகள், கலை நிகழ்ச்சிகள், கண்காட்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் ஏற்காட்டில் குவிந்து மலர் கண்காட்சியை ரசித்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த சில நாட்களாக ஏற்காட்டில் பகல் நேரத்தில் வெயில் சுட்டெரித்து வருதால், அலங்கார வளைவுகள் மற்றும் பல்வேறு உருவங்களில் இருந்த மலர்கள் வாடின. இதைய டுத்து தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து, நேற்று வாடிய பூக்கள் அனைத்தையும் அகற்றினர்.

    அதற்கு பதிலாக புதிய மலர்கள் கொண்டுவரப்பட்டு, மீண்டும் அலங்கரிக் கப்பட்டது. இதனிடையே, நேற்று மாலை ஏற்காட்டில் இடியுடன் கூடிய மழை பெய்தது. இதனால் சீதோஷண நிலையில் மாற்றம் ஏற்பட்டு குளிர் நிலவியது. இதனால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

    செல்லப்பிராணிகள்

    கண்காட்சி

    கோடைவிழாவின் 7-ம் நாளான இன்று, மலர்கண்காட்சியை காண ஏராளமான சுற்றுலா பயணிகள் திரண்டுள்ளதால் ஏற்காடு களை கட்டியுள்ளது. ஏற்காடு அண்ணா பூங்காவில் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ள மலர்களை அவர்கள் கண்டு ரசித்தனர். மலர்களால் வடிவ மைக்கப்பட்ட பல்வேறு உருவங்கள் முன்பும், வண்ணமயமான மலர்களுக்கு முன்பும் நின்று குடும்பத்துடன் புகைப்படம், செல்பி எடுத்து மகிழ்ந்தனர். ஏற்காடு படகு இல்லத்தில் குவிந்த சுற்றுலா பயணிகள் படகு சவாரி செய்து மகிழ்ந்தனர். ஏற்காட்டில் இன்று சைக்கிள் போட்டி, இளைஞர்களுக்கான கிரிக்கெட் போட்டி மற்றும் கால்நடை பராமரிப்பு துறை சார்பில் நாய் மற்றும் வீட்டு வளர்ப்பு விலங்குகள் கண்காட்சி நடைபெற்றது. இதில் காவல்துறையை சேர்ந்த நாய்களுக்கான கீழ்படிதல், சாகச காட்சிகள் ஆகியவைகளும் இடம் பெற்றன. தொடர்ந்து சுற்றுலா பயணிகளை மகிழ்விக்க, நாட்டிய நிகழ்ச்சி, நகைச்சுவை பட்டிமன்றம் மற்றும் இன்னிசை கச்சேரியும் நடத்தப்பட்டது.

    Tags:    

    Similar News