உள்ளூர் செய்திகள்

சேலம் மாவட்ட தீயணைப்புத்துறைக்கு 2 நவீன தீயணைப்பு வாகனம் வழங்கல்

Published On 2023-06-02 09:09 GMT   |   Update On 2023-06-02 09:09 GMT
  • சேலம் மாவட்டத்துக்கு ரூ.1.8 கோடி மதிப்புள்ள 2 நவீன தீயணைப்பு வாகனங்கள் வழங்கப்பட்டுள்ளது.
  • செவ்வாய்ப்பேட்டை தீயணைப்பு நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள இந்த நவீன வாகனங்கள் தலா 12 ஆயிரம் லிட்டர் தண்ணீர் கொள்ளளவு பிடிக்கக்கூடியது.

சேலம்:

தமிழ்நாடு தீயணைப்புத்துறையில் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிக்கு நவீன வாகனங்கள், கருவிகளை வாங்கி பயன்படுத்தி வருகின்றனர். இதில் சென்னை, கோவை, மதுரை, திருச்சி, சேலம், வேலூர், திருப்பூர், திருநெல்வேலி உள்ளிட்ட மாவட்டங்களில் தீயணைப்புத்துறையை மேம்படுத்தும் வகையில் அதிநவீன கருவிகளை பயன்பாட்டிற்கு கொண்டு வரும் பணியையும், மீட்பு குழுவினருக்கு தொடர் பயிற்சிகள் அளிப்பதையும் அதிகாரிகள் மேற்ெகாண்டுள்ளனர்.

2 நவீன வாகனங்கள்

அந்த வகையில், சேலம் மாவட்டத்துக்கு ரூ.1.8 கோடி மதிப்புள்ள 2 நவீன தீயணைப்பு வாகனங்கள் வழங்கப்பட்டுள்ளது. செவ்வாய்ப்பேட்டை தீயணைப்பு நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள இந்த நவீன வாகனங்கள் தலா 12 ஆயிரம் லிட்டர் தண்ணீர் கொள்ளளவு பிடிக்கக்கூடியது. வழக்க மாக உள்ள தீயணைப்பு வாகனங்கள் 4,500 லிட்டர் தண்ணீர் பிடிக்கக்கூடிய தாக உள்ளது.

அதனுடன் இந்த வாக னங்களை சேர்த்துள்ளதால் பெரிய அளவில் பற்றி எரியும் தீயை வேகமாக கட்டுப்படுத்த இயலும். இந்த புதிய வாகனத்தில் ஒளிரும் விளக்குகள் உள்ளன. இரவு நேரத்தில் தீயணைப்பு வாகனம் விரைந்து செல்ல ஏதுவாக வடிவமைத்துள்ளனர்.

தண்ணீரை பீய்ச்சி அடிப்பதற்காக 100 அடி தூரத்திற்கு குழாய் இருக்கி றது. இவ்வகை வாகனத்தை இயக்கி தீயை கட்டுப்படுத்து வது மிக எளிது. அதனால், இந்த வாகனத்தை பயன்ப டுத்த தீயணைப்பு வீரர்க ளுக்கு பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது.

Tags:    

Similar News