சிகிச்சை அளிக்க அழைத்து நியூட்ரிசனை தாக்கிய கும்பல்
- ராஜேந்திரனுக்கு போன் செய்து தனது பாட்டிக்கு உடல் எடை 80 கிலோ இருப்பதாகவும், அதை குறைக்க சிகிச்சை தர வேண்டும் என கூறியுள்ளார்.
- 3 மர்மநபர்கள், ராஜேந்திரனை தகாத வார்த்தையால் திட்டியதுடன், இரும்பு ராடால் தாக்கி காயப்படுத்தினர்.
சங்ககிரி:
சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே பக்காளியூரை சேர்ந்தவர் ராஜேந்திரன் (62). இவர் நியூட்ரிசன் வேலை செய்து வருகிறார். நேற்று காலை அடையாளம் தெரியாத நபர் ராஜேந்திரனுக்கு போன் செய்து தனது பாட்டிக்கு உடல் எடை 80 கிலோ இருப்பதாகவும், அதை குறைக்க சிகிச்சை தர வேண்டும் என கூறியுள்ளார். இதையடுத்து ராஜேந்திரன், மர்ம நபர் கூறிய ராயலூர் என்ற பகுதிக்கு சென்றுள்ளார்.
அப்போது அங்கு வந்த 3 மர்மநபர்கள், ராஜேந்திரனை தகாத வார்த்தையால் திட்டியதுடன், இரும்பு ராடால் தாக்கி காயப்படுத்தினர். ராஜேந்திரன் வலியால் கூச்சலிடவே, அவர்கள் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.
ராஜேந்திரன் சத்தம்கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சங்ககிரி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இதுகுறித்து ராஜேந்திரன் சங்ககிரி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து, ராஜேந்திரனை தாக்கிய மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.