செங்கோட்டை குலசேகரநாதர் கோவிலில் சனி பிரதோச வழிபாடு
- கோவில் நடைதிறக்கப்பட்டு சங்கல்பம், கணபதி பூஜையுடன் தொடங்கி ஸ்தபண கும்பகலச பூஜை, ருத்திர ஜெபம், வருணஜெபம், தீபாராதனை நடைபெற்றது.
- நந்தி பெருமானுக்கு மஞ்சள், பால், தேன், விபூதி, பன்னீர், இளநீர்சந்தனம் போன்ற 36 நறுமணம் வகையான அபிஷேகம் பூஜைகள் நடைபெற்றன.
செங்கோட்டை:
செங்கோட்டை குலசேகரநாதர் கோவிலில் சுவாமி, அம்பாள் மற்றும் நந்தீஸ்வருக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார ஆராதனைகள் நடந்தது. இதனை முன்னிட்டு மாலை 4 மணிக்கு கோவில் நடைதிறக்கப்பட்டு சங்கல்பம், கணபதி பூஜையுடன் தொடங்கி ஸ்தபண கும்பகலச பூஜை, ருத்திர ஜெபம், வருணஜெபம், தீபாராதனை நடைபெற்றது.
தொடர்ந்து குலசேகரநாதர் கோவிலில் சுவாமி, நந்தி பெருமானுக்கு மஞ்சள், பால், தேன், விபூதி, பன்னீர், இளநீர்சந்தனம் போன்ற 36 நறுமணம் வகையான அபிஷேகம் பூஜைகள் நடைபெற்றன. பூஜைகளை கணேஷ பட்டர் செய்தார். பூஜை முடிவில் கேசரி, பொங்கல், தேங்காய் சாதம், லெமன் சாதம், பஞ்சாமிர்தம், சுண்டல் என 6 வகை அருள் பிரசாதம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை மண்டாக படிதாரர்கள் செய்திருந்தனர்.கொட்டும் மழையிலும் செங்கோட்டை மற்றும்அதன்சுற்று வட்டார பகுதியை சேர்ந்த பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.