உள்ளூர் செய்திகள்

ஆற்றில் கொட்டப்படும் குப்பைகள்.

தென்பெண்ணை ஆற்றின் தடுப்பணையில் சுகாதார சீர்கேடு

Published On 2023-01-20 10:08 GMT   |   Update On 2023-01-20 10:08 GMT
  • அவ்வழியே செல்லமுடியாத அளவிற்கு துர்நாற்றமும் வீசுகிறது.
  • குப்பைகளை ஆற்றங்கரையில் கொட்ட தடை விதிக்க வேண்டும்.

மத்தூர்,

கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அருகே அரசம்பட்டி - பண்ணந்தூர் புதிய பாலம் அருகில் தென்பெண்ணை ஆற்றின் கரையில் தென் ஈஸ்வர் கோவில் அமைந்துள்ளது.

இங்கு தினந்தோறும் பல்வேறு இடங்களில் இருந்து நூற்றுக்கணக்கான மக்கள் வந்து வழிபடுகின்றனர். அதுமட்டுமின்றி ஆற்றங்கரையில் நீராடுவது, இயற்கை அழகை பார்த்து ரசிப்பது அருகாமையில் தடுப்பணை உள்ளது.

இத்தடுப்பணையை காணவும், நீராடவும் மக்கள் வந்து செல்கின்றனர். ஆனால் தற்போது இந்த நிலையில் கடந்த சில நாட்களாக அரசம்பட்டி ஊராட்சியை சேர்ந்த துப்புரவு பணியாளர்கள் குப்பைகளை ஆற்றங்கரையிலும், ஆற்றிலும் கொட்டுவதோடு, தீ வைக்கின்றனர்.

இதனால் அப்பகுதி புகைமண்டலமாக உள்ளது. அத்துடன் அவ்வழியே செல்லமுடியாத அளவிற்கு துர்நாற்றமும் வீசுகிறது. இங்கு மாடுகள், ஆடுகள் போன்றவை மேய்ச்சலுக்கு விடப்படுகின்றன.

ஆனால் தற்போது குப்பைகளை கொட்டப்படுவதால் கால்நடைகள் வளர்த்தல் மிகவும் சிரமமாக இருக்கிறது, பல்வேறு வகையான நோய்கள் பரவுகின்றன. எனவே குப்பைகளை ஆற்றங்கரையில் கொட்ட தடை விதிக்க வேண்டும் என்று அப்பகுதியில் வசிக்கும் மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Tags:    

Similar News