உள்ளூர் செய்திகள்

சவுக்கு சங்கர் நிரந்தர பணிநீக்கம்: அரசு நடவடிக்கை

Published On 2022-09-25 02:17 GMT   |   Update On 2022-09-25 02:17 GMT
  • 2008-ம் ஆண்டு அரசு ஆவணங்களை கசியவிட்ட புகாரில் சிக்கி பணியிடைநீக்கம் செய்யப்பட்டார்.
  • பிழைப்பூதியமாக மாதம் ரூ.43 ஆயிரம் வீதம் என 14 ஆண்டுகளில் ரூ.65 லட்சம் வரை வழங்கப்பட்டுள்ளது.

சென்னை :

நீதித்துறை குறித்து 'யூடியூப்' சமூக வலைத்தளத்தில் சவுக்கு சங்கர் சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்தார். இதையடுத்து அவர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. இதில் அவருக்கு 6 மாதம் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

சவுக்கு சங்கர், தமிழக அரசின் லஞ்ச ஒழிப்பு ஊழல் தடுப்பு துறையில் அலுவலகராக பணியாற்றி வந்தார். 2008-ம் ஆண்டு அரசு ஆவணங்களை கசியவிட்ட புகாரில் சிக்கி பணியிடைநீக்கம் செய்யப்பட்டார்.

தொடர்ந்து பணியிடை நீக்கத்திலேயே இருந்து வந்த அவருக்கு பிழைப்பூதியமாக மாதம் ரூ.43 ஆயிரம் வீதம் என 14 ஆண்டுகளில் ரூ.65 லட்சம் வரை வழங்கப்பட்டுள்ளது. வழக்கு விசாரணையின்போது சென்னை ஐகோர்ட்டு மதுரை கிளை இதனை கண்டித்திருந்தது.

இந்த நிலையில் சவுக்கு சங்கர் அரசு பணியில் இருந்து நிரந்தரமாக நீக்கம் செய்யப்பட்டுள்ளார். தற்போது கடலூர் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் அவருக்கு இந்த நோட்டீஸ் கொடுக்கப்பட்டதாகவும், அதனை அவர் வாங்க மறுத்துவிட்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

Tags:    

Similar News