ஜாகீர்வெங்கடாபுரத்தில் பள்ளி மேலாண்மை குழு கூட்டம்
- பெற்றோர்கள் தங்களின் கருத்துக்களையும், கோரிக்கைகளையும் எடுத்துக் கூறினர்.
- அனைத்து பெற்றோர்களும் செய்தித்தாள்கள் வாங்கி தங்கள் குழந்தைகளுக்கு வழங்க வேண்டும்
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி அடுத்த ஜாகீர்வெங்கடாபுரம் அரசு உயர்நிலைப்பள்ளியில், 6-ம் முதல் 10-ம் வகுப்பு படிக்கும் மாணவர்களின் பெற்றோர், பெற்றோர் ஆசிரியர் கழக உறுப்பினர்கள் மற்றும் பள்ளி மேலாண்மைக்குழு உறுப்பினர்கள் ஆலோசனைக் கூட்டம் நடந்தது.
கூட்டத்திற்கு பள்ளியின் தலைமை ஆசிரியர் (பொறுப்பு) விஜய் தலைமை தாங்கி பள்ளியின் எதிர்கால திட்டம், மாணவர்களின் முன்னேற்றம், பள்ளியின் தேவைகள் குறித்து விளக்கி பேசினார். அத்துடன், அனைத்து மாணவர்களையும் அரசு பள்ளியில் சேர்க்கவும், இடைநிற்றல் இன்றி பள்ளிக்கு அனுப்பவும் கேட்டுக் கொண்டார்.
பெற்றோர்கள் தங்களின் கருத்துக்களையும், கோரிக்கைகளையும் எடுத்துக் கூறினர். இக்கல்வியாண்டில் விடுப்பு எடுக்காமல் பள்ளிக்கு வருகை தந்த அனைத்து மாணவ, மாணவியரையும் பாராட்டி பரிசுகள் வழங்கப்பட்டன. வட்டார வளமைய மேற் ார்வையாளர்(பொறுப்பு) அசோக், குழந்தைகளின் நலனில் பெற்றோர்கள் அக்கறையுடன் செயல்பட வேண்டும் என்றும், அனைத்து பெற்றோர்களும் செய்தித்தாள்கள் வாங்கி தங்கள் குழந்தைகளுக்கு வழங்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.
இக்கூட்டத்தில், பள்ளி மேலாண்மைக் குழு தலைவர் சென்னம்மாள், துணைத் தலைவர் முருகன், உறுப்பினர்கள் மற்றும் 176 மாணவர்களின் பெற்றோர்கள், அனைத்து ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். முன்னதாக ஆசிரியர் ராம்பிரசாத் வரவேற்றார். முடிவில் ஆசிரியர் சங்கர் நன்றி கூறினார்.