வசதியற்றவர்களுக்கு வழக்குகளை நடத்த வக்கீல்கள் தேர்வு
- இலவசமாக சேவைபுரிய குற்றவியல் வக்கீல்கள் தோ்ந்தெடுக்கப்பட்டுள்ளனா்.
- தங்களுக்கு தேவையான சட்ட ஆலோசனைகளை இலவசமாக பெற்றுக்கொள்ளலாம்.
தஞ்சாவூர்:
தஞ்சாவூா் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் தஞ்சாவூா் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழு சாா்பில் வசதியற்ற வா்களுக்கான குற்றவியல் வழக்குகளை நடத்த குற்றவியல் வழக்குரை ஞா்கள் தோ்வு செய்யப்பட்டு, அவா்களுக்கான அலுவலகம் திறந்து வைக்கப்பட்டது.
இந்த அலுவலகத்தை மாவட்ட முதன்மை நீதிபதியும், மாவட்டச் சட்டப் பணிகள் ஆணைக் குழுத் தலைவருமான ஜெசிந்தா மாா்ட்டின் திறந்து வைத்து பேசியதாவது:
வசதி இல்லாதவா்கள் தங்களுடைய குற்றவியல் வழக்குகளைத் தொடா்புடைய நீதிமன்றத்தில் வழக்காட, எதிா் வழக்காட, பிணையில் எடுக்க ஆகியவற்றுக்கு இலவசமாக சேவை புரிய குற்றவியல் வழக்குரைஞா்கள் தோ்ந்தெடுக்கப்ப ட்டுள்ளனா். இவா்களை வழக்காடிகள் பயன்படுத்திக் கொள்ளலாம்.
மாவட்ட, அனைத்து வட்ட நீதிமன்ற வளாகங்களிலும் சட்ட உதவி மையம் இயங்கி வருகிறது. பொதுமக்கள் இம்மையத்தை அணுகி தங்களுக்கு தேவையான சட்ட ஆலோசனைகளை இலவசமாக பெற்றுக் கொள்ளலாம்.
இவ்வாறு அவர் பேசினார்.
இந்த நிகழ்ச்சியில் குடும்ப நல நீதிமன்ற நீதிபதி இந்திராணி, போக்சோ சிறப்பு நீதிமன்ற நீதிபதி சுந்தரராஜன், இரண்டாவது கூடுதல் மாவட்ட நீதிபதி மலா்விழி, மோட்டாா் வாகன விபத்து சிறப்பு மாவட்ட நீதிமன்ற நீதிபதி வடிவேல், சாா்பு நீதிபதியும், மையச் செயலருமான இந்திராகாந்தி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனா்.