உள்ளூர் செய்திகள்

'அனைவருக்கும் வீடு' திட்டத்தில் பயனாளிகள் தேர்வு செய்யும் முகாம்

Published On 2022-11-21 07:11 GMT   |   Update On 2022-11-21 07:11 GMT
  • ‘அனைவருக்கும் வீடு’ திட்டத்தில் பயனாளிகள் தேர்வு செய்யும் முகாம் வருகிற 24,25-ந் தேதிகளில் நடக்கிறது.
  • மாத வருமானம் ரூ.25 ஆயரத்துக்கு மிகாமலும் உள்ளது என சான்றளிக்க வேண்டும்.

சிவகங்கை

சிவகங்கை மாவட்ட கலெக்டர் மதுசூதன் ரெட்டி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரி யம் மதுரை கோட்டத்தின் மூலம் "அனைவருக்கும் வீடு" திட்டத்தின் கீழ் அடுக்கு மாடி குடியிருப்புகள் கட்டும் திட்டம் சிவகங்கை தாலுகா, பையூர்பிள்ளை வயல் திட்டப்பகுதி கட்டி முடிக்கப்பட்டுள்ள 608 அடுக்கு மாடி குடியிருப்புகள் பயனாளிகளுக்கு ஒதுக்கீடு செய்யப்பட உள்ளது.

இந்த திட்டத்தில் கட்டப்படும் குடியிருப்புகளுக்கு சிவகங்கை நகராட்சி எல்கைக்குட்பட்ட அரசுக்கு சொந்தமான நீர்நிலை வகைப்பாடு கொண்ட ஆட்சேபகரமான நீர்நிலைகள் மற்றும் அரசுக்கு சொந்தமான இதர புறம்போக்கு நிலங்களில் குடியிருந்து வரும் ஆக்கிரமிப்பாளர்கள் பட்டியல் மாவட்ட நிர்வாகத்தின் மூலம் பரிந்துரைக்கப்பட்டு தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் மூலம் ஒப்புதல் பெறப்பட்ட பயனாளிகளுக்கு ஒதுக்கீடு செய்வதில் முன்னுரிமை அளிக்கப்படும்.

மேலும், நகர்புற வீடற்ற பொருளாதாரத்தில் நலி வடைந்த பிரிவினர்களுக்கு முன்னுரிமை அளித்து குடி யிருப்புகள் ஒதுக்கீடு செய்ய மாவட்ட நிர்வாகத்தின் மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இந்த திட்டத்தில் ஒரு குடியிருப்புக்கான செலவுத் தொகையில் மத்திய மற்றும் மாநில அரசின் மானியத்தொகை போக மீதமுள்ள பயனாளிகளின் பங்குத்தொகையை பயனாளிகள் செலுத்த வேண்டும். ''அனைவருக்கும் வீடு" திட்ட விதிகளின்படி மேற்கண்ட நிபந்தனைகளுக்கு உட்பட்டு மேற்கண்ட திட்டப்பகுதி களில் கட்டப்படுகின்ற அடுக்குமாடி குடியிருப்புகள் தேவைப்படுவோர் இந்தியாவில் எனது பெயரிலோ, எனது குடும்ப உறுப்பினர்கள் பெயரிலோ வேறு எங்கும் வீடுகள் இல்லை எனவும், மாத வருமானம் ரூ.25 ஆயரத்துக்கு மிகாமலும் உள்ளது என சான்றளிக்க வேண்டும்.

பயனடைய விரும்பும் பயனாளிகள் குடும்ப தலைவர் மற்றும் குடும்ப தலைவி ஆகிய இருவருடைய ஆதார், வங்கி கணக்கு புத்தகம் ஆகியவற்றுடன் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம், பையூர்பி ள்ளைவயல் அடுக்குமாடி குடியிருப்பு திட்டப்பகுதி, சிவகங்கை என்ற முகவரியில் வருகிற 24, 25-ந்தேதி வரை காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும் சிறப்பு முகாமில் கலந்து கொண்டு பயன்பெறலாம்.

இத்திட்டத்தின் கீழ் பயனடைய விரும்பும் பயனாளிகள் ரூ.5 ஆயிரம் மதிப்பிற்கான கேட்பு காசோலையினை The Executive Engineer TNUu;DB PIU - I Madurai) என்ற பெயரில் எடுத்து (மனுதார், பயனாளியின் ஆதார் நகல் (கணவன் மற்றும் மனைவி), வண்ணப்புகைப்படம் - 2, குடும்ப அட்டை நகல், வாக்காளர் அடையாள அட்டை நகல், வங்கி கணக்கு புத்தக நகல்) ஆகியவற்றை மனுவுடன் இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.

இந்த தொகையானது பயனாளியின் பங்களிப்பு தொகையில் வரவு வைக்கப்பட்டு மீத தொகையினை குடியிருப்பு ஒதுக்கீடு செய்யும்போது பயனாளிகள் செலுத்த வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News