உள்ளூர் செய்திகள்

நெகிழிப்பைகளை தவிர்க்க வேண்டும்

Published On 2023-07-02 08:47 GMT   |   Update On 2023-07-02 08:47 GMT
  • நெகிழிப்பைகளை தவிர்க்க வேண்டும்.
  • விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கலெக்டர் பேசினார்.

சிவகங்கை

சிவகங்கை மாவட்டம், சிவகங்கை நகராட்சிக் குட்பட்ட பகுதிகளில் தூய்மை இந்தியா இயக்கத்தின் கீழ், கூட்டு துப்புரவுப் பணிகள் மற்றும் பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சியினை, மாவட்ட கலெக்டர் ஆஷா அஜித்,சிவகங்கை பழைய நீதிமன்ற வாசல் அருகி லுள்ள, ராமச்சந்திரா பூங்கா பகுதியில் தொடங்கி வைத்து பேசியதாவது:-

தூய்மை இந்தியா திட்டத்தின் மூலம் அனைத்து இடங்களிலும் ஒருமுறை பயன்படுத்திய நெகிழிப்பைகளை அப்புறப்படுத்தும் திட்டம் ஒன்றிய, மாநில அரசின் ஒருங்கிணைப்புடன் செயல்படுத்தப்பட்டு, பொதுமக்களிடையே பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்தவகையில், மண்ணை பாதுகாப்போம் நெகிழிப் பயன்பாட்டை தவிர்ப்போம் என்ற குறிக்கோளுடன் பொதுமக்களாகிய ஒவ்வொருவரும் நெகிழிப் பயன்பாட்டை தவிர்ப்பது குறித்து, மாவட்டத்தின் அனைத்துப் பகுதிகளிலும், தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

நகர்ப்பகுதி மட்டுமன்றி கிராமப்பகுதிகளிலும் பொதுமக்கள் ஒருமுறை பயன்படுத்தக்கூடிய நெகிழிப்பையை தவிர்க்க வேண்டும். அனைவரும் ஒன்றிணைந்து வருங்காலங்களில் ஒருமுறை பயன்படுத்தக்கூடிய நெகிழியை தவிர்த்து மண் வளத்தை பாதுகாப்பதுடன் சுகாதாரத்தையும் பாதுகாத்திடும் வகையில் அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட்டு, மீண்டும் மஞ்சள்பை திட்டத்தினை கருத்தில் கொண்டு அனைவரும் நெகிழிப் பயன்பாட்டினை முற்றிலும் தவிர்த்திடல் வேண்டும்.

இதேபோன்று, சுகாதாரத்தினை பேணிக்காத்திடும் வகையில், குப்பைகளை தங்களது பகுதிகளிலுள்ள தெருவோரங்களில் போடாமல், தங்களது வீடுகளில் சேகரமாகும் குப்பைகளை, முறையாக தங்களது வீட்டிலேயே மக்கும் குப்பை, மக்காத குப்பை என தரம் பிரித்து, தங்களது பகுதிகளுக்கு வரும் தூய்மைப் பணியாளர்களிடம் வழங்கிட வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

இந்நிகழ்ச்சியில், நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்கம் கீழ், குப்பைகளை தரம் பிரித்திடுவோம், சுற்றுப்புறச் சூழலை பாதுகாத்திடு வோம்-என் குப்பை எனது பொறுப்பு என்ற தலைப்பில், சிவகங்கை நகராட்சி சார்பில் விழிப்புணர்வு உறுதிமொழி கலெக்டர் தலைமையில் ஏற்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் சிவகங்கை நகர்மன்றத்தலைவர் துரைஆனந்த், நகராட்சி ஆணையாளர் (பொ) பாண்டீஸ்வரி, நகர்மன்ற உறுப்பினர்கள் மற்றும் தன்னார்வ தொண்டு நிறு வனத்தைச் சார்ந்தவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News