- நூல் வெளியீட்டு விழா நடந்தது.
- வந்தேறும் குடிகள் நூல் குறித்து மன்னர் மேல் நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் சுந்தர்ராஜன் பேசினார்.
சிவகங்கை
சிவகங்கை மாவட்ட மைய நூலகத்தில் நடந்த 56-வது தேசிய நூலக வார விழாவில் வந்தேறும் குடிகள் என்ற நூலை முன்னாள் அழகப்பா பல்கலைக்கழக துணை வேந்தர் சுப்பையா வெளியிட சிவகங்கை நகர் மன்ற தலைவர் துரை ஆனந்த் பெற்றுக் கொண்டார்.
மாவட்ட நூல் இருப்பு சரிபார்ப்பு அலுவலர் வெள்ளைச்சாமி கண்ணன் தலைமை வகித்தார். நூலகர் முத்துக்குமார் வரவேற்றார். தமிழ்ச் செம்மல் பகிரத நாச்சியப்பன் வாசிப்பின் அவசியம் குறித்து பேசினார்.
வந்தேறும் குடிகள் நூல் குறித்து மன்னர் மேல் நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் சுந்தர்ராஜன் பேசினார்.
நூலகத் தன்னார்வ லர்கள் ரமேஷ் கண்ணன், தொழிலதிபர் பாண்டிவேல், நல்லாசிரியர் கண்ணப்பன், புலவர் மெய் ஆண்டவர் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். நூல் ஆசிரியர் ஈஸ்வரன் ஏற்புரை வழங்கினார். நூலகர் கனக ராஜன் நன்றி கூறினார்.
விழாவில் நூலகர்கள், நூலக பணியாளர்கள் மற்றும் வாசகர்கள், பள்ளி மாணவ, மாணவிகள், பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.