- சிவகங்கையில் கர்ப்பிணி பெண்களுக்கான சமுதாய வளைகாப்பு விழா நடந்தது.
- இந்த நிகழ்ச்சிக்கு சிவகங்கை சட்டமன்ற உறுப்பினர் செந்தில்நாதன் தலைமை தாங்கினார்.
கர்ப்பிணி பெண்களை செந்தில்நாதன் எம்.எல்.ஏ. அட்சதை தூவி வாழ்த்தினார்.
சிவகங்கையில் கர்ப்பிணி பெண்களுக்கான சமுதாய வளைகாப்பு விழா நடந்தது. மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் வாசுகி முன்னிலை வகித்தார். சிவகங்கை சட்டமன்ற உறுப்பினர் செந்தில்நாதன் தலைமை தாங்கினார்.
விழாவில் 120 கர்ப்பிணி பெண்களுக்கு மங்கள பொருட்கள். மற்றும் அட்சதை தூவி வாழ்த்து தெரிவித்த சட்டமன்ற உறுப்பினர் செந்தில்நாதன் பேசுகையில், வளைகாப்பு என்பது பண்டைய தமிழர் சடங்கு மற்றும் கருவுற்ற தாய்மார்களுக்கு செய்யும் சடங்கு ஆகும்.
ஜெயலலிதா காட்டிய வழியில் தற்போது கர்ப்பிணி பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு விழா நடத்தப்படுகிறது. ஏழை, எளிய பெண்களுக்கு வளைகாப்பு நடத்த வசதி இல்லையே என்ற ஏக்கத்தை போக்கும் வகையில் சமுதாய வளைகாப்பு விழா நடத்தப் படுகிறது. கர்ப்பிணி தாய்மார்களுக்கு சமுதாய வளைகாப்பை அரசின் சார்பில் நடத்த வேண்டும் என 2013-ம் ஆண்டு ஆணையிடப்பட்டு அதன்படி ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒன்றிய அளவில் சமுதாய வளைகாப்பு விழா இன்று வரை நடத்தப்பட்டு வருகிறது.
இதன் மூலம் கர்ப்பிணி பெண்கள் மனதளவிலும், உடல் அளவிலும் மகிழ்ச்சியும், மன அமைதி யும் அடைகிறார்கள். பிறக்கப் போகும் குழந்தை நல்ல ஆரோக்கியமான சூழ்நிலையில் பிறப்பதற்கும், குழந்தைகளுக்கு ஏற்படும் வளர்ச்சி மற்றும் கேட்கும் திறன் வயிற்றில் இருக்கும் போதே உருவாகி விடுவதால் அறிவு வளர்ச்சி, சமுதாய வளர்ச்சி ஏற்படுவதற்கு இந்த சமுதாய வளைகாப்பு விழா சிறந்ததாக உள்ளது. என்றார். இந்த நிகழ்வில் கூட்டுறவு சங்க தலைவர்கள் செல்வ மணி, கோபி, செந்தில்குமார், சேதுபதி, விளார்.பாண்டி உள்பட பலர் கலந்து கொண்டனர்.