உள்ளூர் செய்திகள்

சிம்மவாகனத்தில் வந்த ஆனந்தவல்லி அம்மன்-சோமநாதர்.

ஆனந்தவல்லி அம்மன் பக்தர்கள் வழிபாடு

Published On 2023-04-26 08:10 GMT   |   Update On 2023-04-26 08:36 GMT
  • சிம்மவாகனத்தில் வந்த ஆனந்தவல்லி அம்மனை பக்தர்கள் வழிபாடு செய்தனர்.
  • திருக்கல்யாண வைபவம் மே 2-ந் தேதியும், தேரோட்டம் 3-ந் தேதியும் நடைபெறுகிறது.

மானாமதுரை

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை வைகைஆற்று கரையில் பிரசித்தி பெற்ற ஆனந்தவல்லி-சோமநாதர், வீர அழகர் கோவில் உள்ளது. இந்த கோவில்களில் ஆண்டு தோறும் சித்திரை திருவிழா 10 நாட்கள் நடை பெறும்.

இந்த ஆண்டு திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. முதல்நாள் விழாவில் கோவில் முன்பு அமைக்கப்பட்ட அரங்கில் ஆனந்தவல்லிஅம்மன் சிம்ம வாகனத்தில் எழுந்தருளினார். பின் ரதவீதிகளில் வலம் வரும் நிகழ்ச்சி நடந்தது. வைகைஆற்றில் திரண்ட ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

முன்னதாக நடந்த கொடியேற்ற நிகழ்ச்சியில் மானாமதுரை எம்.எல்.ஏ. தமிழரசி, நகர்மன்றத் தலைவர் மாரியப்பன் கென்னடி, முன் னாள் எம்.எல்.ஏ. நாகராஜன், தொழில் அதிபர் நடராஜன் மற்றும் பக்தர்கள் கலந்து கொண்டனர். கொடியேற்றத்துக்கான பூஜைகளை ராஜேஷ் பட்டர், சோமாஸ் கந்தன் பட்டர் உள் ளிட்ட சிவாச்சாரியர்கள் நடத்தினர்.

திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருக்கல்யாண வைபவம் மே 2-ந் தேதியும், தேரோட்டம் 3-ந் தேதியும் நடைபெறுகிறது.

Tags:    

Similar News