- சிவகங்கை மாவட்டத்தில் தி.மு.க. செயல்வீரர்கள் கூட்டம் நாளை நடக்கிறது.
- சாக்கோட்டை கிழக்கு, கண்ட னூர் பேரூர், புது வயல் நிர்வாகிகள் பங்கேற்கி றார்கள்.
மானாமதுரை
சிவகங்கை மாவட்ட தி.மு.க. செயலாளரும், கூட்டுறவுத்துறை அமைச்சரு மான கே.ஆர்.பெரிய கருப்பன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்ப தாவது:-
கடந்த 22-ந் தேதி சென்னையில் நடைபெற்ற மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவின் பேரில் நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலில் சட்டமன்ற தொகுதிக்கான பொறுப்பாளர்கள் பாராளுமன்ற தேர்தல் பணிகள் குறித்து ஆலோசனை வழங்கு வதற்கான ஒன்றிய, நகர, பேருர் செயல்வீரர்கள் கூட்டம் நாளை 1-ந் தேதி (சனிக்கிழமை) நடைபெற உள்ளது. ஒன்றிய, நகர, பேரூர் செயலாளர்கள் இக்கூட்டத்தினை சிறப்பான முறையில் ஏற்பாடு செய்திடுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் .
அதன்படி காலை 10 மணிக்கு காரைக்குடி சட்டமன்ற தொகுதியில் தேவகோட்டை நகர், வடக்கு, தெற்கு பகுதிகளை சேர்ந்த செயல்வீரர்கள் கூட்டமும், பகல் 12 மணிக்கு காரைக் குடி நகர் தி.மு.க. அலுவல கத்திலும், மாலை 4 மணிக்கு சொர்ணமகாலில் செயல்வீரர்கள் கூட்டம் பொறுப்பாளர் செந்தில் குமார் முன்னிலையில் நடக்கிறது. இதில் சாக்கோட்டை கிழக்கு, கண்ட னூர் பேரூர், புது வயல் நிர்வாகிகள் பங்கேற்கி றார்கள்.
திருப்பத்தூர் சட்டமன்றத்தொகுதி பொறுப்பாளர் முன்னாள் எம்.எல்.ஏ. ராஜன் முன்னிலையில் காலை 10 மணிக்கு யாதவா திருமண மண்டபத்திலும், 12 மணிக்கு இன்பம் மகாலிலும், மாலை 4 மணிக்கு முத்துகணேஷ் மகாலிலும் செயல்வீரர்கள் கூட்டம் நடக்கிறது.
இதில் சிங்கம்புணரி, திருப்பத்தூர், கல்லல், நெற்குப்பை, பள்ளத்தூர், கானாடுகாத்தான் ஆகிய பகுதிகளை சேர்ந்த நிர்வாகிகள் பங்கேற்கி றார்கள்.
சிவகங்கை சட்டமன்ற தொகுதி பார்வையாளர் டாக்டர் யாழினி முன்னிலை யில் காலை 10 மணிக்கு ஆரோ மகாலிலும், 3 மணிக்கு திருப்பத்தூர் ஏ.எம்.கே. மகாலிலும், 4மணிக்கு செயல்வீரர்கள் கூட்டம் நடக்கிறது. இதில் காளையார் கோவில், நாட்டரசன் கோட்டை, சிவகங்கை, திருப்புவனம் பகுதி நிர்வாகிகள் பங்கேற்கி றார்கள்.
மானாமதுரை சட்டமன்ற தொகுதி செயல்வீரர்கள் கூட்டம் பார்வையாளர் தினேஷ் முன்னிலையில் திருப்புவனம் மருது பாண்டியர் மண்டபத்தில் காலை 10 மணிக்கும், 4 மணிக்கு இளையான்குடி எம்.எம்.மகாலிலும் செயல்வீரர்கள் கூட்டம் நடக்கிறது. இதில் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.