சாதி, மத அடையாளங்களை குறிக்கும் பொருட்களை பயன்படுத்தக்கூடாது
- சாதி, மத அடையாளங்களை குறிக்கும் பொருட்களை பயன்படுத்தக்கூடாது என மாணவ, மாணவிகளுக்கு அறிவுறுத்தப்படுகிறது.
- இருசக்கர வாகனங்களில் சாதி, மதம் சம்மந்தப்பட்ட ஸ்டிக்கர் ஒட்டக்கூடாது என்றார்.
தேவகோட்டை
தமிழகம் முழுவதும் கோடை விடுமுறை முடிந்து பள்ளி மற்றும் கல்லூரியில் திறக்கப்பட்டுள்ள நிலையில் சிவகங்கை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமார் ஆணைக்கிணங்க, துணை சூப்பிரண்டு ரமேஷ் உத்தர வின் பேரில் ேதவகோட்டை நகர் காவல் நிலையத்தில் பள்ளி, கல்லூரி முதல்வர்கள் பங்கேற்ற சிறப்புக் கூட்டம் நடந்தது.
நகர் காவல் ஆய்வாளர் சரவணன் தலைமை தாங்கி பேசுகையில், பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு சாதி, மதத்தை விளக்கும் விதத்தில் கயிறு மற்றும் பிற பொருட்கள் விற்பனை செய்யக்கூடாது என்றும் பள்ளி, கல்லூரி வாளகத்தில் மாணவ, மாணவிகள் கயிறு அணிந்து வர அனுமதிக்க கூடாது. மாலை நேரங்களில் வீட்டுக்கு செல்லும் மாணவர்கள் வெளி இடங்கள் மற்றும் பேருந்து நிலையத்தில் அதிக நேரம் நிற்க கூடாது. இருசக்கர வாகனங்களில் சாதி, மதம் சம்மந்தப்பட்ட ஸ்டிக்கர் ஒட்டக்கூடாது என்றார்.
இக்கூட்டத்தில் நகரில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரி முதல்வர்கள், பேன்சி ஸ்டோர் உரிமையாளர்கள், ஸ்டிக்கர் ஒட்டும் கடை உரிமையாளர்கள் மற்றும் வணிக நிறுவன உரிமையாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.