குழந்தைகளுக்கு எதிரான பிரச்சினைகள் தொடர்பான குறைதீர்க்கும் முகாம்
- குழந்தைகளுக்கு எதிரான பிரச்சினைகள் தொடர்பான குறைதீர்க்கும் முகாம் நடந்தது.
- 250 மனுக்கள் பெறப்பட்டது
சிவகங்கை
திருப்பத்தூரில் தேசிய குழந்தை பாதுகாப்பு ஆணையம், சிவகங்கை மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் குழந்தைகளுக்கு எதிரான பிரச்சினைகள் தொடர் பான சிறப்பு குறைதீர்க்கும் முகாம் நடந்தது. தேசிய குழந்தை உரிமை கள் பாதுகாப்பு ஆணைய பதிவாளர் கோமதி மனோஜா தலைமை தாங்கினார். மாவட்ட வருவாய் அலுவலர் மோகனச்சந்திரன் முன்னிலை வகித்தார்.
குழந்தைகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பாக பொதுமக்கள் மற்றும் குழந்தைகளிடம் இருந்து 250 மனுக்கள் பெறப்பட்டது. இந்த மனுக்களில் 8 மனுக்கள் உடனடியாக பரிசீலிக்கப்பட்டு மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் செவித் திறன் கருவி, மடக்கு சக்கர நாற்காலி, மாற்றுத் திறனாளி அடையாள அட்டை ஆகியவை வழங்கப்பட்டது.
இதில் கல்வித்துறை, பொது சுகாதாரத்துறை, வருவாய் துறை, ஊரக வளர்ச்சித்துறை, சமூக நலத்துறை, மாற்றுத்திற னாளிகள் நலத்துறை, ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்டம், காவல்துறை, குழந்தைகள் நலக்குழு, இளைஞர்; நீதிக் குழுமம், சட்டப் பணிகள் ஆணைக்குழு, தொழிலாளர் நலத்துறை, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை, பிற்படுத் தப்பட்டோர் மற்றும் சிறு பான்மையினர் நலத்துறை மற்றும் மாவட்ட குழந்தை கள் பாதுகாப்பு அலுவலகம் ஆகிய துறைகளை சேர்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.