அதிநவீன சிறுநீரக சுத்திகரிப்பு-லேசர் சிகிச்சை மையங்கள் திறப்பு விழா
- காரைக்குடி கே.எம்.சி மருத்துவமனையில் அதிநவீன சிறுநீரக சுத்திகரிப்பு-லேசர் சிகிச்சை மையங்கள் திறப்பு விழா நடந்தது.
- தீவிர சிகிச்சை பிரிவில் உள்ள நோயாளிக்கு தொடர்ச்சியான டயாலிசிஸ் சிகிச்சை அளித்து உயிர் காப்பாற்றப்படும்.
காரைக்குடி
சிவகங்கை மாவட்டத்தில் முதல்முறையாக காரைக்குடி கே.எம்.சி. மருத்துவமனையில் தொடர்ச்சியான அதிநவீன சிறுநீரக சுத்திகரிப்பு சிகிச்சை சி.ஆர்.ஆர்.டி மற்றும் அதிநவீன லேசர் சிகிச்சை மையம் தொடங்கப்பட்டுள்ளது.
இதனை காரைக்குடி உதவி காவல் கண்காணிப்பாளர் டாக்டர் ஸ்டாலின் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார்.சிறுநீரக மருத்துவ நிபுணர் சரவணகுமார் முன்னிலை வகித்தார். இந்த தொடர்ச்சியான சிறுநீரக சுத்திகரிப்பு சிகிச்சை முக்கியமாக கடுமையான சிறுநீரக செயலிழப்பால் பாதிக்கப்பட்ட மற்றும் தீவிர சிகிச்சை பிரிவில் உள்ள நோயாளிகளுக்குப் பயன்படுத்தப்படுகிறது.
இந்த செயல்முறை மாற்றாக ஹீமோடியா பில்ட்ரேஷன் என்று அழைக்கப்படுகிறது. கிட்டத்தட்ட தொடர்ச்சியாக, ஒரு நாளைக்கு 12 முதல் 24 மணி நேரம் நீடிக்கும்.தீவிர சிகிச்சை பிரிவில் உள்ள நோயாளிக்கு தொடர்ச்சியான டயாலிசிஸ் சிகிச்சை அளித்து உயிர் காப்பாற்றப்படும்.
சிவகங்கை மாவட்டத்தில் முதன் முறையாக கே.எம்.சி.மருத்துவமனையில் அறுவை சிகிச்சை இல்லாமல் லேசர் சிகிச்சை முறையில் மருத்துவம் செய்யும் துறையும் தொடங்கப்பட்டுள்ளது.வெரிகோஸ் வெயின் உலகளவில் வயது வந்தோரில் 23 சதவீதத்திற்கும் அதிகமானோர் ஒவ்வொரு ஆண்டும் இந்த நோயால் பாதிக்கப்படுவதாக கருதப்படுகிறது. வெரிகோஸ் வெயின் பொதுவாக கால்களை பாதிக்கிறது.
நீண்டநேரம் நின்று கொண்டிருப்பதால் கால்களில் ஏற்படும் அழுத்தம் காரணமாக கால்கள் இந்த நோயால் பாதிப்பு ஏற்படும். கே.எம்.சி.மருத்துவமனையில் வெரிகோஸ் வெயின் சிகிச்சைகளை வழங்குகி றார்கள். வெரிகோஸ் வெயினை குணப்படுத்துவதற்கு தொந்தரவில்லாத அனுபவத்தையும், சிறந்த வகையில் லேசர் அறுவை சிகிச்சையையும் வழங்க கே.எம்.சி. குழு தயாராக இருக்கிறது.
இதன் மூலம் பொது மக்களுக்கு உயர்தர சிகிச்சையை காரைக்குடி பகுதியில் வழங்க முடியும் என்று கே.எம்.சி. மருத்துவமனை தலைமை மருத்துவர் காமாட்சி சந்திரன் தெரிவித்தார். இந்த நிகழ்வில் கே.எம்.சி மருத்துவமனை தலைமை மருத்துவர் சலீம் ஆர்த்தோ மற்றும் மருத்துவர்கள், காவல்துறை அதிகாரிகள் கலந்துகொண்டனர்.