வாக்காளர் பட்டியல் சிறப்பு முகாம்களை கண்காணிப்பு அலுவலர் ஆய்வு
- வாக்காளர் பட்டியல் சிறப்பு முகாம்களை கண்காணிப்பு அலுவலர் ஆய்வு செய்தார்.
- வாக்குச் சாவடி நிலை முகவர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
சிவகங்கை
சிவகங்கை மாவட்டத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப் பட்டதையடுத்து நவ.4,5 மற்றும் 18, 19 ஆகிய தேதிகளில் சிறப்பு வாக்கா ளர் பட்டியல் திருத்த முகாம்கள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.
அதன்படி சிவகங்கை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் நேற்று வாக்கா ளர் பட்டியல் சிறப்பு முகாம் நடந்தது. மானா மதுரை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி, சிவகங்கை மன்னர் துரைசிங்கம் அரசு கலைக் கல்லூரி, திருக்கோஷ்டியூர் அரசு மேல்நிலைப்பள்ளி ஆகிய வாக்குசாவடி மையங்களிலும் சிறப்பு முகாம்கள் நடந்தன.
இந்த முகாம்களை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் சுந்தரவள்ளி, கலெக்டர் ஆஷா அஜீத் ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டனர். இந்த முகாம்களில் வாக்காளர் பட்டியல் பெயர் சேர்த்தல், நீக்கம், முகவரி மாற்றம் மற்றும் திருத்தங்களை பொதுமக்கள் மேற்கொள்ள லாம். இந்த சிறப்பு முகாம் களில் சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடி நிலை அலுவர்கள் மூலமாக நேரடியாகவும், https://voters.eci.gov.in இணைய தளம் வழியாகவும் விண்ணப் பிக்கலாம்.
இந்த சிறப்பு முகாம்களை பயன்படுத்தி பொதுமக்கள் வாக்காளர் பட்டியலில் பெயர் மாற்றம் மற்றும் திருத்தங்களுக்கான பணிகளை மேற்கொள்ள லாம் என கண்காணிப்பு அலுவலர் தெரிவித்தார்.
இந்த ஆய்வின்போதுஇ தேவகோட்டை வருவாய் கோட்டாட்சியர் பால்துரை, தனி வட்டாட்சியர் (தேர்தல்) மேசியாதாஸ், வட்டாட் சியர்கள் சிவராமன் (சிவ கங்கை), ஆனந்த் (திருப் பத்தூர்), துணை வட்டாட்சி யர் (தேர்தல்) மற்றும் வாக்குச் சாவடி நிலை முகவர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.