- இளங்கலை முதலாமாண்டு வகுப்புகள் மற்றும் புத்தாக் கப்பயிற்சி தொடக்க விழா நடைபெற்றது.
- கல்லூரி மாணவர்களுக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.
மானாமதுரை
சிவகங்கை மாவட்டம், இளையான்குடி, டாக்டர் சாகிர் உசேன் கல்லூரியில் இளங்கலை முதலாமாண்டு வகுப்புகள் மற்றும் புத்தாக் கப்பயிற்சி தொடக்க விழா நடைபெற்றது. இந்த விழா வுக்கு இயற்பியல்துறை தலைவர் முஸ்தாக் அஹமது கான் வரவேற்றார். கல்லூரி ஆட்சிக்குழு தலைவர் அஹ மது ஜலாலுதீன் தலைமை தாங்கினார்.
கல்லூரி ஆட்சிக்குழு செயலர் ஜபருல்லாஹ் கான், ஆட்சிக்குழு உறுப்பி னர் ஹமீத் தாவூத், டாக்டர் சாகிர் உசேன் கல்வியியல் கல்லூரி முதல்வர் முஹம் மது முஸ்தபா ஆகியோர் வாழ்த்தி பேசினார். இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தி னராக திருச்சி, ஜமால் முஹம்மது கல்லூரி, மேனாள் துணை முதல்வர் முஹம்மது சஹாபுதீன் கலந்து கொண்டு சிறப்புரை யாற்றினார். கல்லூரி முதல் வர் ஜபருல்லாஹ் கான் முதலாமாண்டு மாணவ-மாணவியருக்கு கல்லூரி விதிமுறைகள் குறித்து எடுத் துரைத்தார்.
நிகழ்வில் 2019-ம் முதல் 2022-ம் ஆண்டு வரை பல்கலைக்கழக ரேங்க் பெற்ற மாணவ-மாணவி களுக்கு பதக்கம் வழங்கப்பட் டது. நிகழ்ச்சியில் கல்லூரி ஆட்சிக்குழு உறுப்பினர் அஸ்ரப் அலி மற்றும் அப்துல் சலீம், இளையான் குடி ஊர் பிரமுகர்கள் முஹம்மது ஹுசைன், முசாதிக் அலி உள்ளிட்ட ஊர் பொதுமக்கள், பேரா சிரியர்கள், அலுவலர்கள், மாணவ-மாணவியர், பெற் றோர் கலந்து கொண்டனர். முடிவில் கல்லூரி துணை முதல்வர் ஜஹாங்கிர் நன்றி கூறினார்.