உள்ளூர் செய்திகள்

திருப்பத்தூர் அருகே வைரவன்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் லால்வேனா, கலெக்டர் ஆஷா அஜித் ஆகியோர் ஆய்வு செய்தனர்.

வளர்ச்சி திட்டப்பணிகளை ஆய்வு செய்த கண்காணிப்பு அலுவலர்

Published On 2023-10-21 07:20 GMT   |   Update On 2023-10-21 07:20 GMT
  • வளர்ச்சி திட்டப்பணிகளை கண்காணிப்பு அலுவலர் ஆய்வு செய்தார்.
  • குழந்தைகள் மருத்துவமனையின் செயல்பாடுகளையும் ஆய்வு செய்தனர்.

சிவகங்கை

சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில் அனைத்து துறைகளை சார்ந்த முதல் நிலை அலுவலர்களுடன் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்த கலந்தாய்வு கூட்டம் நடந்தது. மாவட்ட கண்காணிப்பு அலுவலர் லால்வேனா, கலெக்டர் ஆஷா அஜித் ஆகியோர் தலைமை வகித்தனர்.

கூட்டத்தில் ஒவ்வொரு துறைகளின் சார்பில் இதுவரை மேற்கொண்ட திட்டப்பணிகள் மற்றும் மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள், தேவை யான நிதி நிலைகள் ஆகியன தொடர்பாக துறை சார்ந்த அலுவலர்கள் எடுத்து ரைத்து, அவைகள் தொடர் பான விவரங்களை அறிக்கையாக சமர்ப்பிக்குமாறு அலுவலர்களுக்கு மாவட்ட கண்காணிப்பு அலுவலர் அறிவுறுத்தினார்.

முன்னதாக திருப்பத்தூர் வட்டாட்சியர் அலுவலகம், திருப்பத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் ஆகிய வற்றின் செயல்பாடுகள், ரூ.472.80 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் புதிய அலுவலக கட்டுமான பணிகள், நெடுமரம் மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கான பனை ஓலை பயிற்சி மையம், தி.வைரவன்பட்டி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் எண்ணும் எழுத்தும் திட்டத்தின் செயல்பாடுகள், அரசனூர் ஆரம்ப சுகாதார நிலையத்தின் செயல்பாடு கள் ஆகியன குறித்து மாவட்ட கண்காணிப்பு அலுவலர், கலெக்டர் ஆய்வு செய்தனர்.

மேலும் மக்களை தேடி மருத்துவ திட்ட பயனாளிகளை சந்தித்து குறைகளை கேட்டறிந்தனர்.

பின்னர் சிவகங்கை அரசு மகளிர் மற்றும் குழந்தைகள் மருத்து வமனையின் செயல்பாடு களையும் ஆய்வு செய்தனர்.

Tags:    

Similar News