குரங்குகளின் தொல்லையால் அவதியுறும் பொதுமக்கள்
- திருப்பத்தூரில் குரங்குகளின் தொல்லையை கட்டுப்படுத்த பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- மின்கம்பங்களில் ஏறி விளையாடுவதால் மின் இணைப்புகள் அறுந்து மின்சாரம் துண்டிக்கப்படுகிறது.
திருப்பத்தூர்
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் நகரில் கடந்த சில தினங்களாக 50-க்கும் மேற்பட்ட குரங்குகள் முற்றுகையிட்டுள்ளன. குரங்குகளின் தொல்லை யால் பொதுமக்கள் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகி உள்ளனர்.
நகரின் முக்கிய வீதிகளான பெரிய கடை வீதி, சின்ன கடைவீதி, 4 ரோடு, கூகல் பெர்க் சாலை, காளியம்மன் கோவில் தெரு, அக்னி பஜார், சீதளி வடகரை, தேரோடும் வீதி, ஆறுமுகம் பிள்ளை தெரு, தென்மாட்டு ஆகிய பகுதிகளில் சுற்றி திரிகின்றன. வீட்டின் கதவுகள் திறந்திருந்தால் உள்ளே புகுந்து மளிகை பொருட்கள், காய்கறிகள், பழங்கள் ஆகியவற்றை குரங்குகள் எடுத்து செல்கின்றன.
மேலும் அருகாமையில் உள்ள கடைவீதி மற்றும் உழவர் சந்தையிலும் காய்கறி கள், பழங்கள், திண்பண்டங்களை தின்று சூறையாடி வருகின்றன. வீதிகளில் இருக்கும் மின்கம்பங்களில் ஏறி மின் வயர்களில் குரங்குகள் விளையாடுவதால் மின் இணைப்புகள் அறுந்து மின்சாரம் துண்டிக்கப்படுகிறது. இரு சக்கர வாகனங்க ளில் வருபவர்களையும் பொருட்களை கொண்டு செல்போர்களையும் குரங்குகள் அச்சுறுத்து கின்றன.
இப்படி நாள்தோறும் பொது மக்கள் பல்வேறு இன்னல்களை சந்தித்து வருகின்றனர். எனவே மாவட்ட நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுத்து குரங்கு களை பிடித்து வனபகுதியில் அதனை கொண்டு சென்று விட வேண்டும் கோரிக்கை எழுந்துள்ளது.