காய்கறி, மிளகாய் உற்பத்தியாளர்களுக்கான கருத்தரங்கு
- எஸ்.புதூரில் காய்கறி, மிளகாய் உற்பத்தியாளர்களுக்கான கருத்தரங்கை கலெக்டர் தொடங்கி வைத்தார்.
- தொழில்நுட்ப ரீதியாக சந்தைப்படுத்துவதற்கான முறைகளை அறிந்து கொண்டு பயன்பெற வேண்டும்.
சிவகங்கை
சிவகங்கை மாவட்டம் எஸ்.புதூர் ஊராட்சி ஒன்றியத்தில் காய்கறி மற்றும் மிளகாய் உழவர் உற்பத்தியாளர்களுக்கான கருத்தரங்கு நடந்தது. இதை கலெக்டர் மதுசூதன் ரெட்டி தொடங்கி வைத்தார்.
பின்னர் அவர் பேசியதாவது:-
எஸ்.புதூர் ஊராட்சி ஒன்றியப்பகுதியில் காய்கறி மற்றும் பப்பாளி பழங்கள் வெகுவாக விளைகின்றன. அதனை முறையாக தொழில்நுட்ப ரீதியாக சந்தைப்படுத்துவதற்கான முறைகளை அறிந்து கொண்டு பயன்பெற வேண்டும்.
விவசாயிகளுக்கு பய னுள்ள வகையில், பல்வேறு தொழில் நுட்பங்கள் குறித்து, திறன்மிக்க வல்லுநர்களை கொண்டு இந்த கருத்தரங்கில் எடுத்துரைக்கப்படவுள்ளது. இதனை முறையாக பயன்படுத்திக் கொண்டு மற்ற விவசாயிகளுக்கும் இது குறித்து எடுத்துரைத்து பயன்பெற வேண்டும்.
இவ்வாறு கலெக்டர் பேசினார்.
இந்த கருத்தரங்கில் பல்வேறு வகையான விதைகளை விவசாயி களுக்கு கலெக்டர் வழங்கினார். இதில் டாக்டர்கள் செந்தில்குமார், சங்கர், துணை இயக்குநர்(வேளாண் வணிகம்) தமிழ்செல்வி, போஸ், மண்டல ஒருங்கி ணைப்பாளர் (விதைகள்) ஜீவானந்தம், வேளாண்மை அலுவலர்கள் காளிமுத்து, கனிமொழி மரகதம், புவனேசுவரி உள்பட பலர் கலந்துகொண்டனர்.