குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு கையெழுத்து இயக்கம்
- குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு கையெழுத்து இயக்கத்தை அமைச்சர் தொடங்கி வைத்தார்.
- மாவட்ட குழந்தைகள் மற்றும் ஆட்கடத்தல் தடுப்பு பிரிவு காவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
சிவகங்கை
ஒவ்வொரு ஆண்டும் ஜூன்12-ந்தேதி குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தினம் அனுசரிக்கப் படுகிறது. இதையொட்டி சிவகங்கை மாவட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு கையெழுத்து இயக்கத்தினை அமைச்சர் பெரியகருப்பன் கையெழுத்திட்டு தொடங்கி வைத்தார்.
இதைத்தொடர்ந்து சிவ கங்கை மாவட்ட கலெக்டர் ஆஷா அஜித் கையெழுத் திட்டார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட திட்ட அலுவலர், காவல்துறை கூடுதல் கண் காணிப்பாளர், சிவகங்கை நகராட்சி தலைவர், திருப்புவனம் பேரூராட்சி தலைவர் மற்றும் அனைத்து அரசுத் துறை தலைவர்கள் கலந்து கொண்டனர்.
முன்னதாக சிவகங்கை மாவட்ட திட்ட அலுவலர் தலைமையில் உலக குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு உறுதிமொழி ஏற்கப்பட்டது.
அனைத்து துறை தலைவர்கள், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு அலுவலர், சைல்டு லைன் மேற்பார்வையாளர்கள், மாவட்ட குழந்தைகள் மற்றும் ஆட்கடத்தல் தடுப்பு பிரிவு காவலர்கள் ஆகி யோர் கலந்து கொண்டனர். மேலும் சிவகங்கை, காரைக் குடி, தேவகோட்டை, திருப்பத்தூர் ஆகிய பகுதிகளில் உள்ள கடைகள், நிறுவ னங்களின் உரிமையா ளர்கள் மற்றும் பணியாளர்கள் ஆகியோரும் கலந்து கொண்டு உறுதிமொழி எடுத்தனர்.
குழந்தை தொழிலாளர் முறை ஒழிப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக சிவகங்கை பஸ் நிலையத்தில் இருந்து தொண்டி ரோடு, அரண் மனை, நேரு பஜார், தெற்கு ராஜவீதி ஆகிய பகுதிகள் வழியாக விழிப்புணர்வு பேரணி நடந்தது. அப்போது பொதுமக்களிடையே துண்டு பிரசுரங்கள் வினியோகம் செய்யப்பட்டது. மேலும் பொதுமக்கள் அதிகமாக கூடும் பகுதிகளில் விழிப்புணர்வு பிளக்ஸ் பதாகைகள் வைக்கப்பட்டிருந்தது.
இந்த தகவலை சிவகங்கை மாவட்ட தொழிலாளர் உதவி ஆணையர் கோட்டீஸ் வரி தெரிவித்துள்ளார்.