உள்ளூர் செய்திகள்

பணத்தை மீட்டு உரியவரிடம் ஒப்படைத்த போலீசார்

Published On 2023-05-26 08:25 GMT   |   Update On 2023-05-26 08:25 GMT
  • இரட்டிப்பு மோசடி வழக்கில் பணத்தை மீட்டு உரியவரிடம் போலீசார் ஒப்படைத்தார்.
  • ராமமூர்த்தி அந்த லிங்கில் தனது விவரங்களை பதிவேற்றம் செய்தார்.

சிவகங்கை

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியை சேர்ந்தவர் ராமமூர்த்தி. இவரது செல்போனில் வாட்ஸ்-அப் மூலம் பணம் முதலீடு செய்தால் இரட்டிப்பாக கிடைக்கும் என்று குறுஞ்செய்தி அனுப்பப்பட்டிருந்தது. இதனை நம்பிய ராமமூர்த்தி அந்த லிங்கில் தனது விவரங்களை பதிவேற்றம் செய்தார். அதில் உள்ள பொருட்களை விற்றுக் கொடுத்தால் லாபம் கிடைக்கும் என்றிருந்ததை நம்பிய அவர் 16 தவணைகளாக ரூ.82 ஆயிரத்து 400-ஐ அனுப்பினார். இந்த பணத்தை பெற்றுக்கொண்டவர் ஏமாற்றியது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின்பேரில் சிவகங்கை சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

இதையடுத்து இழந்த தொகை ரூ.82 ஆயிரத்து 400-ஐ போலீசார் மீட்டனர். பின்னர் அந்த தொகை இன்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் போலீஸ் சூப்பிரண்டு செல்வராஜ், ராமமூர்த்தியிடம் ஒப்படைத்தார்.

Tags:    

Similar News