உள்ளூர் செய்திகள்

பாம்புகள் பின்னி பிணைந்துள்ள காட்சி

திண்டுக்கல் அருகே கிணற்றில் பின்னிப்பிணைந்து ஆடிய பாம்புகள்

Published On 2022-07-02 06:50 GMT   |   Update On 2022-07-02 06:50 GMT
  • திடீரென நல்லபாம்பு மற்றும் சாரைப்பாம்பு ஆகிய இரண்டும் கிணற்றுக்குள் தாவி அங்கிருந்தபடியே பின்னிப்பிணைந்து நடனமாடியது.
  • சுமார் 3 மணிநேரமாக நடந்த இந்த காட்சியை அப்பகுதி மக்கள் பக்திபரவசத்துடன் கண்டு வழிபட்டனர்.

குள்ளனம்பட்டி:

திண்டுக்கல் அருகில் உள்ள ரெட்டியபட்டியில் காளியம்மன், மாரியம்மன், பகவதியம்மன் கோவில் உள்ளது. இங்குள்ள கோவிலுக்கு வெள்ளி மற்றும் செவ்வாய்கிழமைகளில் அதிகளவு பக்தர்கள் வருகை தருவது வழக்கம்.

அதன்படி வெள்ளிக்கிழமையான நேற்று மாலையில் பக்தர்கள் கோவிலுக்கு வந்து கொண்டிருந்தபோது கோவிலுக்கு சொந்தமான கிணற்றை 4 பாம்புகள் சுற்றியபடி வந்தது.

அதில் திடீரென நல்லபாம்பு மற்றும் சாரைப்பாம்பு ஆகிய இரண்டும் கிணற்றுக்குள் தாவி அங்கிருந்தபடியே பின்னிப்பிணைந்து நடனமாடியது.

சுமார் 3 மணிநேரமாக நடந்த இந்த காட்சியை அப்பகுதி மக்கள் பக்திபரவசத்துடன் கண்டு வழிபட்டனர். கிணற்று மேட்டில் தேங்காய் உடைத்தும், சூடம் ஏற்றியும் வழிபாடு செய்தனர்.

கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு இதேபோன்ற நிகழ்வு தங்கள் ஊரில் நடந்ததாகவும், அதன்பிறகு தற்போது அந்த காட்சியை காணமுடிந்ததாகவும் அவர்கள் தெரிவித்தனர். இச்சம்பவத்தால் ரெட்டியபட்டி கிராமத்தில் பரபரப்பு ஏற்பட்டது.


Tags:    

Similar News