உள்ளூர் செய்திகள்

சேலம் மாவட்டத்தில் கலப்பட உணவுப்பொருள் விற்ற வழக்கில் ரூ.6.81 லட்சம் அபராதம்

Published On 2022-08-17 09:11 GMT   |   Update On 2022-08-17 09:11 GMT
  • உணவு பாதுகாப்புத்துறை சார்பில் சோதனை நடத்தி, கலப்படம், தரமற்ற, பாதுகாப்பற்ற உணவு பொருட்களை சேகரித்து பரிசோதனைக்கு அனுப்பப்பட்டன.
  • சிவில் பிரிவில் பதியப்பட்ட 57 வழக்கு களுக்கு 6 லட்சத்து 81 ஆயிரத்து 500 ரூபாய் அபராதம் விதித்து டி.ஆர்.ஓ. மேனகா உத்தரவிட்டார்.

சேலம்:

சேலம் மாவட்டத்தில் கடந்த ஏப்ரல் மாதம் முதல் ‌ஜூன் மாதம் வரை உணவு பாதுகாப்புத்துறை சார்பில் சோதனை நடத்தி, கலப்படம், தரமற்ற, பாதுகாப்பற்ற உணவு பொருட்களை சேகரித்து பரிசோதனைக்கு அனுப்பப்பட்டன.

அதில் போலி, உணவுக்கு ஒவ்வாத, கேடு விளைவிக்கக்கூடியது என கண்டுபிடித்து சேலம் டி.ஆர்.ஓ. நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

அபராதம்

சிவில் பிரிவில் பதியப்பட்ட 57 வழக்கு களுக்கு 6 லட்சத்து 81 ஆயிரத்து 500 ரூபாய் அபராதம் விதித்து டி.ஆர்.ஓ. மேனகா உத்தரவிட்டார்.

அதில், அதிகபட்சமாக பல்வேறு வகை நொறுக்கு தீனி, தரமற்று உடல் உபாதையை உண்டுபண்ணும் என கண்டறிந்து பதிந்த 18 வழக்கில் ஒரு லட்சத்து 89 ஆயிரத்து 500 ரூபாய், கலப்படம், தரமற்ற ஜவ்வரிசி தொடர்பான 17 வழக்கில் 2 லட்சத்து 32 ஆயிரம் ரூபாய், சமையலுக்கு ஒவ்வாத மசாலா ெதாடர்பான 7 வழக்கில் ஒரு லட்சத்து 3 ஆயிரம் ரூபாய், சமையல் எண்ணை தொடர்பான 6 வழக்கில் 66 ஆயிரம் ரூபாய் என மொத்தம் 57 வழக்குகளுக்கு அபராதம் விதித்து, வழக்கு முடித்து வைக்கப்பட்டது.

123 வழக்குகள் நிலுவை

இது தவிர இன்னும் 123 சிவில் வழக்கு நிலுவையில் உள்ளன. மேலும் 273 குற்ற வழக்கு நீதிமன்ற விசாரணையிலும், 22 குற்ற வழக்கு நீதிமன்றத்தில் பதிவாகாமல் இருப்பதாக மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் கதிரவன் தெரிவித்தார்.

Tags:    

Similar News