உள்ளூர் செய்திகள்

அவதூறு பேச்சு: இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத்தின் மகன் கைது

Published On 2024-11-10 09:30 GMT   |   Update On 2024-11-10 09:30 GMT
  • ரேஸ்கோர்ஸ் போலீஸ் நிலையத்துக்கு கொண்டு வரப்பட்டு அவரிடம் விசாரணை நடந்தது.
  • போலீசாரை கண்டித்து இந்து மக்கள் கட்சி சார்பில் போராட்டம் நடத்தப்படும் என அவர் அறிவித்துள்ளார்.

கோவை:

கோவை தெற்கு தாலுகா அலுவலகம் முன்பு கடந்த 27-ந் தேதி ஈஷா யோகா மையத்துக்கு எதிராக அவதூறு பரப்புபவர்களை கண்டித்து இந்து மக்கள் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

ஆர்ப்பாட்டத்தில் இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத், அவரது மகனும், இந்து மக்கள் கட்சி மாநில இளைஞர் அணி தலைவருமான ஓம்கார் பாலாஜி உள்ளிட்டோர் பங்கேற்று பேசினர்.

ஓம்கார் பாலாஜி பேசுகையில் நக்கீரன் கோபால் பற்றி அவதூறாக பேசியதாக கூறப்படுகிறது. இதுபற்றி அப்துல்ஜலீல் என்பவர் கோவை ரேஸ்கோர்ஸ் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

அதன்பேரில் ஓம்கார் பாலாஜி மீது ரேஸ்கோர்ஸ் போலீசார் பொது அமைதிக்கு குந்தகம் ஏற்படுத்துதல், குற்றநோக்கத்துடன் செயல்படுதல் ஆகிய 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்தநிலையில் கெம்பட்டி காலனியில் உள்ள ஓம்கார் பாலாஜி வீட்டுக்கு போலீசார் சென்றனர். அங்கிருந்த அவரை போலீசார் கைது செய்தனர். பின்னர் ரேஸ்கோர்ஸ் போலீஸ் நிலையத்துக்கு கொண்டு வரப்பட்டு அவரிடம் விசாரணை நடந்தது.

ஓம்கார் பாலாஜி கைது செய்யப்பட்ட சம்பவத்துக்கு அர்ஜூன் சம்பத் கண்டனம் தெரிவித்துள்ளார். இதற்காக போலீசாரை கண்டித்து இந்து மக்கள் கட்சி சார்பில் போராட்டம் நடத்தப்படும் என அவர் அறிவித்துள்ளார்.

Tags:    

Similar News