உள்ளூர் செய்திகள் (District)

மதுக்கடைகளை அகற்ற டாஸ்மாக்கிற்கு தெற்கு ரெயில்வே கடிதம்

Published On 2024-09-23 06:29 GMT   |   Update On 2024-09-23 06:29 GMT
  • 39 டாஸ்மாக் கடைகளை ரெயில்வே பாதுகாப்பு படை அடையாளம் கண்டுள்ளது.
  • குற்ற சம்பவங்கள் அதிகம் நடப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

சென்னை:

சென்னை புறநகர் மின் சார ரெயில் மீது கல்வீச்சு, சிக்னல் சேதம், திருட்டு போன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடைபெறுவதால் பயணிகள் பாதிக்கப்படுகிறார்கள்.

சென்னை மற்றும் காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் ரெயில் நிலையங்களுக்கு அருகில் உள்ள டாஸ்மாக் கடைகள் மற்றும் பார்களே இதற்கு முக்கிய காரணம் என்று ரெயில்வே பாதுகாப்பு படையின் ஆய்வில் தெரிய வந்தது.


கடந்த 10 நாட்களுக்கு முன்பு தெற்கு ரெயில்வே சார்பில் டாஸ்மாக் நிறுவனங்களுக்கு அனுப்பிய கடிதத்தில் கூறியிருப்பதாவது:-

சென்னை கோட்டத்தில் புறநகர் மின்சார ரெயில் நிலையங்களில் இருந்து 10 முதல் 200 மீட்டர் தொலைவில் அமைந்துள்ள 39 டாஸ்மாக் கடைகளை ரெயில்வே பாதுகாப்பு படை அடையாளம் கண்டுள்ளது.

இந்த கடைகள் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப் பேட்டை, வேலூர் மாவட்டங்களில் உள்ளன என்று அதில் குறிப்பிடப்பட்டு உள்ளது. பார்களில் மது அருந்திவிட்டு ரெயில் தண்டவாளத்தில் இறந்து கிடக்கின்றனர்.

பெரம்பூர், வேளச்சேரி, சைதாப்பேட்டை, கிண்டி, தரமணி, பெருங்குடி, திருவள்ளூர், ஊரப்பாக்கம், பழவந்தாங்கல், குரோம்பேட்டை, அரக்கோணம், இந்து கல்லூரி, ஆவடி உள்ளிட்ட இடங்களில் ரெயில் நிலையங்களுக்கு அருகில் மதுக்கடைகள் அமைந்துள்ளன.

லெவல் கிராசிங் கேட்களுக்கு அருகில் செயல்படும் மதுக்கடைகளை அப்புறப்படுத்த வேண்டும் என்று தெற்கு ரெயில்வே வலியுறுத்தி உள்ளது.

தற்போது கல்வி நிறுவனங்கள், வழிபாட்டு தலங்களுக்கு அருகில் மதுக்கடைகள் செயல்பட தடை உள்ளது.

ஆனால் ரெயில் நிலையங்களுக்கு அருகில் மதுக்கடைகள், பார்கள் செயல்படுவதால் ரெயில்வே குற்ற சம்பவங்கள் அதிகம் நடப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags:    

Similar News