- தேவையான பனை விதைகளை கிரீன் நீடா சுற்றுச்சூழல் இயக்கம் வழங்குகிறது.
- தமிழ் பல்கலைக் கழகத்தில் 824 ஏக்கா் இடம் உள்ளது.
தஞ்சாவூர்:
கிரீன் நீடா சுற்றுச்சூழல் இயக்கம் சாா்பில் தமிழகம் முழுவதும் சாலையோரம், கோயில் வளாகங்கள், பொது இடங்களில் மரக்கன்றுகள் நட்டு பராமரித்தல், பனை விதைகளைச் சேகரித்து, பனை விதைகள் விதைத்தல் ஆகிய பணிகளை மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில், தஞ்சாவூா் தமிழ்ப் பல்கலைக்கழக வளாகத்தில் சுற்றுச்சூழலைப் பாதுகாக்கவும், தமிழா்களின் பாரம்பரிய மரங்களில் ஒன்றான பனை மரங்களை அதிகளவில் கொண்டு வர வேண்டும் என்பதற்காகவும் 10,000 பனை விதைகள் விதைக்கும் பணி நடைபெற்றது.
இந்த பணியை துணைவேந்தா் திருவள்ளு வன் தொடங்கி வைத்து பேசியதாவது:-
தமிழ் பல்கலைக் கழகத்தில் 824 ஏக்கா் இடம் உள்ளது. இதில் பல வகையான மரங்கள் இருந்தாலும், பனை மரங்களின் எண்ணிக்கை குறைவாகவே உள்ளது.
இதை அதிகப்படுத்துவதற்காக 10,000 பனை விதைகளை விதைக்கிறோம். தற்போது மழை பெய்து வரும் நிலையில், பனை விதைகள் மண்ணில் புதைந்து வளருவதற்கு வாய்ப்பாக அமையும்.
தேவையான பனை விதைகளை கிரீன் நீடா சுற்றுச்சூழல் இயக்கம் வழங்குகிறது. இவ்வாறு அவர் கூறினார்.
நிகழ்வில் கிரீன் நீடா சுற்றுச்சூழல்இயக்கத் தலைமை ஒருங்கிணை ப்பாளா் ராஜவேல், மாவட்ட ஒருங்கிணைப்பாளா்கள் ஜானகிராமன், சிலம்பரசன், பசுமை எட்வின், சண்முகவடிவேல், தகவல் தொழில்நுட்பப் பிரிவு ஒருங்கிணைப்பாளா் முகமது ரபீக், பசுமை இயக்க ஆா்வலா்கள் தஞ்சாவூா் முரளி, நீடாமங்கலம் உஷா, ஆடிட்டா் சக்தி பெருமாள், தமிழ்ப்பல்கலைக்கழகச் சுவடிப் புல முதன்மையா் கண்ணன், ஒருங்கிணைப்பாளா் பழனிவேலு, நாட்டு நலப்பணித் திட்ட அலுவலா்கள் இந்து, வெங்கடேசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனா்.