உள்ளூர் செய்திகள் (District)

தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் பள்ளி மாணவர்களுக்கு பேச்சுப் போட்டிகள்

Published On 2023-11-19 08:49 GMT   |   Update On 2023-11-19 08:49 GMT
  • ஊட்டி, சி.எஸ்.ஐ., சி.எம்.எம். மேல்நிலைப்பள்ளியில் 28, 29-ந்தேதிகளில் நடக்கிறது
  • 24-ந்தேதிக்குள் விண்ணப்பங்களை மின்னஞ்சலில் அனுப்ப வேண்டுகோள்

ஊட்டி,

நீலகிரி மாவட்ட கலெக்டர் அருணா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் 2021-2022ஆம் ஆண்டிற்கான மானியக்கோரிக்கை அறிவிப்பிற்கிணங்க 2023-2024-ஆம் ஆண்டில் நீலகிரி மாவட்டத்தில் 28.11.2023 அன்று அண்ணல் காந்தியடிகள் மற்றும் 29.11.2023 அன்று ஜவகர்லால் நேரு ஆகியோர்களின் பிறந்த நாளையொட்டி மாவட்ட த்தில் செயல்பட்டு வரும் அனைத்து பள்ளிகளுக்கும் மாவட்ட அளவிலான பேச்சுப்போட்டிகள் ஊட்டி, சி.எஸ்.ஐ., சி.எம்.எம். மேல்நிலைப்பள்ளியில் பகல் 10 மணிக்கு நடத்தபெற உள்ளன.

இப்போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெறும் பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகளுக்கு ஒவ்வொரு போட்டிக்கும் தனித்தனியே முதல் பரிசாக ரூ.5 ஆயிரம், 2-ம் பரிசாக ரூ.3 ஆயிரம், 3-ம் பரிசாக ரூ.2 ஆயிரம் மற்றும் பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்பெற உள்ளன.

அத்துடன் பள்ளி மாணவர்களுக்கென நடத்த பெறும் பேச்சு போட்டிகளில் பங்கேற்கும் மாணவர்களில் சிறப்புடன் திறமையை வெளிப்படுத்தும் அரசு பள்ளி மாணவர்கள் இருவரை மட்டும் தெரிவு செய்து அவர்கள் ஒவ்வொருவருக்கும் சிறப்பு பரிசுத்தொகையாக ரூ.2 ஆயிரம் மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்க பெற உள்ளன.

காந்தியடிகள் பிறந்தநாள் பேச்சு போட்டிக்கான தலைப்புகள் 1. காந்தியடி களின் வாழ்க்கை வரலாறு 2. தென்னாப்பிரிக்காவில் காந்தியடிகள் 3. வட்டமேசை மாநாட்டில் காந்தியடிகள், ஜவகர் லால் நேரு பிறந்த நாள் பேச்சு போட்டிக்கான தலைப்புகள்: சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமர் 1. ஆசிய ஜோதி 2. மனிதருள் மாணிக்கம் போட்டி களுக்கான தலைப்புகளில் ஏதேனும் ஒன்றை போட்டி நடைபெறும் நேரத்தில் மாணவர்கள் குலுக்கல் சீட்டு முறையில் தெரிவு செய்து அந்த தலைப்பில் மட்டுமே பேசுவதற்கு அனு மதிக்க பெறுவர்.

எனவே தரப்பட்டுள்ள அனைத்து தலைப்புகளிலும் பேசுவதற்கு உரிய தயாரிப்புடன் மாணவர்கள் போட்டிகளில் பங்கேற்க வேண்டும்.

மாவட்ட அளவிலான இப்போட்டிகளில் கலந்து கொள்ள விருப்பமுள்ள மாணவர்கள் உரிய பங்கேற்பு படிவத்தை பூர்த்தி செய்து பள்ளி தலைமையாசிரியர், கல்லூரி முதல்வர் பரிந்துரையுடன் ஒப்பமும் பெற்று 24.11.2023-க்குள் ootytamilvalarchi@gmail.com என்ற மின்னஞ்சலில் அனுப்புதல் வேண்டும். பேச்சு போட்டிகளில் நீலகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் பயிலும் மாணவ-மாணவிகள் கலந்து கொண்டு பயன்பெறுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

Tags:    

Similar News