உள்ளூர் செய்திகள்

நெல்லையில் புரட்டாசி சனிக்கிழமைகளில் நவதிருப்பதி செல்ல சிறப்பு பஸ்கள்

Published On 2024-09-09 07:30 GMT   |   Update On 2024-09-09 07:30 GMT
  • போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.
  • வருகிற 21, 28-ந் தேதி அடுத்தமாதம் 5, 12-ந் தேதி வரை இயக்கப்படுகிறது.

நெல்லை:

புரட்டாசி மாதம் பிறப்பதையொட்டி நெல்லையில் இருந்து நவ திருப்பதி கோவில்களுக்கு சென்று வர போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.

அதன்படி நவ திருப்பதி கோவில்களான ஸ்ரீவைகுண்டம், நத்தம், திருப்புளியங்குடி, இரட்டை திருப்பதி(2), பெருங்குளம், தென்திருப்பேரை, திருக்கோளூர், ஆழ்வார் திருநகரி ஆகிய இடங்களுக்கு இயக்கப்படுகிறது.

அந்த வகையில் புரட்டாசி மாத சனிக்கிழமைகளான வருகிற 21, 28-ந் தேதி அடுத்தமாதம் 5, 12-ந் தேதி ஆகிய 4 நாட்கள் சிறப்பு பஸ்கள் இயக்க தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக நெல்லை மண்டலம் தகுந்த ஏற்பாடுகளை செய்துள்ளது.

இந்த சிறப்பு பஸ்களானது புரட்டாசி மாத சனிக்கிழமை காலை 7 மணிக்கு நெல்லை புதிய பஸ் நிலையத்தில் இருந்து புறப்பட்டு நவ திருப்பதிகளுக்கு சென்று பின்னர் இரவில் மீண்டும் புதிய பஸ் நிலையம் வந்து சேரும்.

இதற்காக ஒரு நபருக்கு கட்டணம் ரூ.500 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்காக முன்புதிவு செய்ய விரும்புவோர் நெல்லை புதிய பஸ் நிலையம், தென்காசி மற்றும் சங்கரன்கோவில் பஸ் நிலையங்களில் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை கட்டண தொகையை முழுமையாக செலுத்தி முன்பதிவு செய்து கொள்ளலாம்.

அல்லது அரசு போக்கு வரத்து கழக இணையதளம் www.tnstc.in மூலமாகவும் விண்ணப்பிக்கலாம்.

இத்தகவலை அரசு போக்குவரத்து கழக நெல்லை மண்டல மேலாளர் சரவணன் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News