கவரை ஊராட்சியில் சிறப்பு கிராம சபை கூட்டம்: அமைச்சர் செஞ்சி மஸ்தான் பங்கேற்பு
- பொதுமக்கள் வைத்த கோரிக்கைகள் கிராம சபையில் பதிவு செய்யப்பட்டன.
- பொதுமக்களின் குறைகளை சொன்னால் அவைகள் கிராம சபை மூலம் தீர்த்து வைக்கப்படும் என்றார்.
விழுப்புரம்:
செஞ்சி ஊராட்சி ஒன்றியத்தை சேர்ந்த கவரை ஊராட்சியில் சிறப்பு கிராம சபை கூட்டம் அதன் தலைவர் அய்யனார் தலைமையில் நடைபெற்றது. செஞ்சி ஒன்றிய குழு தலைவர் விஜயகுமார் முன்னிலை வகித்தார். இதில் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். அப்போது கவரை ஊராட்சியில் ரூ38 லட்சம் மதிப்பில் செயல்படுத்த உள்ள அண்ணா மறுமலர்ச்சி திட்ட பணிகள் தேர்வு செய்வது குறித்து விவாதிக்கப்பட்டது. மேலும் கடந்த 2 ஆண்டுகளில் கவரை ஊராட்சிக்கு செய்யப்பட்ட பணிகள் குறித்து அமைச்சர் செஞ்சு மஸ்தான் விளக்க உரையாற்றினார். மேலும் அவர் பேசுகையில் பொதுமக்களின் குறைகளை சொன்னால் அவைகள் கிராம சபை மூலம் தீர்த்து வைக்கப்படும் என்றார்.
அதன்படி பொதுமக்கள் வைத்த கோரிக்கைகள் கிராம சபையில் பதிவு செய்யப்பட்டன. தொடர்ந்து கருணாநிதி நூற்றாண்டு பிறந்த நாளை முன்னிட்டு பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை அமைச்சர் செஞ்சி மஸ்தான் வழங்கினார். நிகழ்ச்சியில் வட்டார வளர்ச்சி அலுவலர் வெங்கடசுப்பிரமணியன் மாவட்ட கவுன்சிலர் அரங்க ஏழுமலை ஒன்றிய கவுன்சிலர் பனிமலர் ராஜா ராம் ஊராட்சி உறுப்பி னர்கள் சதீஷ், தாட்சாயினி, சங்கர், தினேஷ், கலைவாணி, சிவகாமி, பூங்காவனம், பச்சையம்மாள் ஊராட்சி செயலாளர் கனகா உட்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் துணைத் தலைவர் ரவிச்சந்திரன் நன்றி கூறினார்.