உள்ளூர் செய்திகள்

மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர்க்கும் முகாம்

Published On 2022-11-16 09:53 GMT   |   Update On 2022-11-16 09:53 GMT
  • சான்றுகளை வழங்கினர்.
  • புதிய அடையாள அட்டைகள் வழங்கப்பட்டன.

கோத்தகிரி,

நீலகிரி மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மற்றும் சுகாதாரத்துறை சார்பில், மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர்க்கும் முகாம் கோத்தகிரியில் நடைபெற்றது. முகாமை மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் மலர்விழி தொடங்கி வைத்தார். இதில் பொது டாக்டர்கள், காது, மூக்கு, தொண்டை நிபுணர்கள், கண், மன நல டாக்டர்கள், எலும்பு, மூட்டு சிகிச்சை நிபுணர்கள் கலந்துகொண்டு, மாற்றுத்திறனாளிகளின் ஊனத்தின் சதவீதத்தை சோதனை செய்து, அதற்கான சான்றுகளை வழங்கினர். முகாமில் புதிய பழங்குடியின மாற்றுத்திறனாளிகள் 20 பேர் உள்பட மொத்தம் 37 பேர் கண்டறியப்பட்டு, அவர்களுக்கு தேசிய அடையாள அட்டை வழங்கப்பட்டது. கோத்தகிரி மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த 72 மாற்றுத்திறனாளிகளுக்கு பழைய அடையாள அட்டைகளுக்கு பதிலாக, புதிய அடையாள அட்டைகள் வழங்கப்பட்டன. முகாமில் மாற்றுத்திறனாளிகள், அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News