உள்ளூர் செய்திகள்

முகாம் நடைபெற்றபோது எடுத்தபடம்.

திருப்பணி செட்டிகுளத்தில் சிறப்பு கால்நடை விழிப்புணர்வு முகாம்

Published On 2022-10-21 08:55 GMT   |   Update On 2022-10-21 08:55 GMT
  • திருப்பணி செட்டிகுளத்தில் சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாம் நடந்தது.
  • பஞ்சாயத்து தலைவர் சுயம்புலிங்கம் தலைமை தாங்கினார்.

சாயர்புரம்:

சாயர்புரம் அருகே உள்ள திருப்பணி செட்டிகுளத்தில் செபத்தையபுரம் கால்நடை மருந்தகம் சார்பில் சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாம் நடந்தது.

இந்த முகாமிற்கு திருப்பணி செட்டிகுளம் பஞ்சாயத்து தலைவர் சுயம்புலிங்கம் தலைமை தாங்கினார். துணைத் தலைவர் சரளா முன்னிலை வகித்தார். தூத்துக்குடி கால்நடைத்துறை மண்டல இணை இயக்குனர் ராஜான், உதவி இயக்குனர் ஜோசப் ராஜ், கால்நடை உதவி மருத்துவர் வேல்மாணிக்கவல்லி, கால்நடை ஆய்வாளர்கள் சாந்தி , சுப்பிரமணியன், கால்நடை பராமரிப்பு உதவியாளர்கள் கோமதி, லெட்சுமி, பேச்சியம்மை ஆகியோர் கலந்து கொண்டு கால்நடை சுகாதாரமாக பராமரிப்பு பற்றி பேசி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

முகாமில் கால்நடைகளுக்கு தடுப்பூசி ஊசி போடப்பட்டு, மாத்திரைகள் வழங்கப்பட்டது.சிறந்த முறையில் கால்நடைகளை பராமரிப்பவர்க்கு பரிசுகள் வழங்கப்பட்டது. முகாமில் திருப்பணி செட்டிகுளம் பஞ்சாயத்துக்கு உட்பட்ட கால்நடை வளர்க்கும் மக்கள் தங்கள் கால்நடைகளுடனும், பஞ்சாயத்து உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News