உள்ளூர் செய்திகள்
கோவில்பட்டி முத்துமாரியம்மன் கோவிலில் சிறப்பு பூஜை
- கோவில்பட்டி முத்துமாரியம்மன் கோவிலில் கோகுலாஷ்டமி சிறப்பு பூஜை நடைபெற்றது.
- கோகுலாஷ்டமியை முன்னிட்டு இரவு 7 மணிக்கு கிருஷ்ணர் சிலை அலங்கரிக்கப்பட்டு அவல், வெண்ணெய், தயிர், முறுக்கு படைத்து சிறப்பு பூஜை நடைபெற்றது.
கோவில்பட்டி:
கோவில்பட்டி கதிரேசன் கோவில் ரோட்டில் உள்ள முத்துமாரியம்மன் கோவிலில் கோகுலாஷ்டமி சிறப்பு பூஜை நடைபெற்றது. இதனையொட்டி கணபதி பூஜையுடன் தொடங்கி ஸ்தபன கும்ப கலச பூஜை, யாகசாலை பூஜை, கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், மூலமந்திர ஹோமம், பூர்ணாகுதி தீபாராதனை நடைபெற்றது. பின்னர் கோகுலாஷ்டமியை முன்னிட்டு இரவு 7 மணிக்கு கிருஷ்ணர் சிலை அலங்கரிக்கப்பட்டு அவல், வெண்ணெய், தயிர், முறுக்கு படைத்து சிறப்பு பூஜை நடைபெற்றது. பூஜைகளை சுப்பிரமணிய அய்யர் செய்தார். ஏற்பாடுகளை கோவில் தலைவர் தங்கவேல், செயலாளர் மாரிச்சாமி, பொருளாளர் லட்சுமனன் மற்றும் நிர்வாக கமிட்டி உறுப்பி னர்கள் செய்தனர். இதில் சுற்று வட்டார மக்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.