நாமக்கல் மாவட்டத்தில் ஜல்லிக்கட்டு காளைகளுக்கு சிறப்பு பயிற்சி
- வருகிற 15-ந் தேதி பொங்கல் பண்டிகை வரும் நிலையில், ஜல்லிக்கட்டு போட்டி நடக்க உள்ளது.
- ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்கும் காளைகளை தயார்படுத்தும் பணியில் அதன் உரிமையாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.
நாமக்கல்:
தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை மாநிலம் முழுவதும் விமரி
சையாக கொண்டாடப்ப டுவது வழக்கம். பண்டிகை முதல் நாள் தொடங்கி 4 நாட்கள் அந்தந்த பகுதி
களில் பல்வேறு போட்டிகள்
நடத்தி பரிசுகள் வழங்கப்ப டும். இதில் தமிழரின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு பரவலாக நடத்தப்பட்டு வருகிறது.
வருகிற 15-ந் தேதி பொங்கல் பண்டிகை வரும் நிலையில், நாமக்கல்
அருகே உள்ள பொட்டி
ரெட்டிபட்டி, அலங்கா நத்தம், ராசிபுரம் அருகே உள்ள நாமகிரிப்பேட்டை, முள்ளுக்குறிச்சி ஆகிய இடங்களில் ஜல்லிக்கட்டு போட்டி நடக்க உள்ளது. இதை அடுத்து ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்கும் காளைகளை தயார்படுத்தும் பணியில் அதன் உரிமையாளர்கள் ஈடுபட்டுள்ளனர். இதற்காக காளைகளுக்கு சிறப்பு பயிற்சி அளித்து வருகின்றனர்.
இது தொடர்பாக நாமக்கல்லை சேர்ந்த காளை உரிமையாளர்கள் சிலர் கூறியதாவது, ஜல்லிக்கட்டு காளைகளுக்கு ஆண்டு முழுவதும் பயிற்சி அளிப்போம். பொங்கல் பண்டிகை நேரத்தில் காளைகளுக்கு கூடுதல் பயிற்சி அளிக்கப்படும். உடல் வலுவாக இருக்க நீச்சல் மற்றும் மண்ணை குத்தும் பயிற்சி அளிக்கப்படுகிறது. பருத்திக்கொட்டை போன்ற ஊட்டச்சத்து மிகுந்த தீவனங்கள் ஆண்டு முழுவதும் காளைகளுக்கு வழங்கப்படும்.
காளைகள் நாமக்கல் மட்டுமின்றி மதுரை அலங்கா நல்லூர், சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள கூலமேடு, ஆணையம்பட்டி, தம்மம்பட்டி ஆகிய இடங்களில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டி களுக்கும் அழைத்துச் சென்று
பல்வேறு பரிசுகளை பெற்றுள்ளது. இந்த ஆண்டும் மேலும் பல பரிசுகள் கிடைக்கும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.