தஞ்சையில், மாநில அளவிலான நீச்சல் போட்டி
- பல்வேறு மாவட்டங்களில் இருந்து 595 பதிவுகள் பெறப்பட்டது.
- 6 முதல் 17 வயதுக்குட்பட்ட சிறுவர் மற்றும் சிறுமிகளுக்கான போட்டி தனித்தனியே நடத்தப்பட்டது.
தஞ்சாவூர்:
தஞ்சாவூர் நாஞ்சிக்கோ ட்டை சாலையில் அமைந்துள்ள ஏ.ஒய்.ஏ ஸ்போர்ட்ஸ் கிளப்பில் உள்ள நீச்சல் குளத்தில் கோயம்புத்தூர் ஸ்போர்பி இவெண்ட்ஸ் என்ற நிறுவனம் மற்றும் தஞ்சாவூர் ஏ.ஒய்.ஏ ஸ்போர்ட்ஸ் கிளப் இணைந்து நடத்திய மாநில அளவிளான "அக்வா சாலஞ்" நீச்சல் போட்டி நடத்தப்பட்டது.
இதில் சென்னை, கோவை, மதுரை, திருச்சி, திருநெ ல்வேலி, விருதுநகர், சேலம், நாகப்பட்டினம், திண்டுக்கல் போன்ற பல்வேறு மாவட்டங்களில் இருந்து 595 பதிவுகள் பெறப்பட்டது.
இப்போட்டியினை தஞ்சாவூர் நீச்சல் சங்கம் செயலாளர் ராஜேந்திரன்,
ஸ்போர்பி இவெண்ட்ஸ் தலைவர் ரகு மற்றும் ஷியாம், ஏ.ஒய்.ஏ ஸ்போர்ட்ஸ் கிளப் தலைவர்கள் மார்டின், ஜோன்ஸ், ஏ.ஒய்.ஏ ஸ்போர்ட்ஸ் கிளப் தலைமை நீச்சல் பயிற்றுனர் சார்லஸ் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
இப்போட்டியில் 6 முதல் 17 வயதுக்குட்பட்ட சிறுவர் மற்றும் சிறுமிகளுக்கான போட்டி தனித்தனியே நடத்தப்பட்டது.
நீச்சலில் ஆறு வகைகளில் போட்டி நடத்தப்பட்டது.
போட்டியில் பங்கேற்ற சிறுவர்-சிறுமிக ளுக்கான பதக்கங்கள், சான்றிதழ்கள் ஸ்போர்பி இவெண்ட்ஸ் சார்பாக வழங்கபட்டது.